ரயிலில் ரிசர்வேஷனில் போறீங்களா? டக்னு பெட்டியில் ஏறும் "ஸ்பெஷல் குழு".. ஏன் தெரியுமா? பயணிகள் ஹேப்பி
சென்னை: கோடை விடுமுறையில் வழக்கத்தை விட ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அதிகமாக நிரம்பி காணப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில், ரயில்வே சில முக்கிய வசதிகளை ஏற்படுத்தி தந்து வருகிறது.. எனினும், முன்கூட்டியே ரிசர்வ் செய்யப்பட்டாலும், உரிய பெட்டிகளில் முன்பதிவு செய்யாதவர்களும் ஏறிவிடுகிறார்கள்.. இதனை தடுக்கவும் ரயில்வே, புதிய அதிரடியை கையில் எடுத்துள்ளது. இது பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தற்போது கோடை விடுமுறை நடந்து கொண்டிருக்கிறது.. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என்பதால், பலரும் குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு பயணமாகி வருகிறார்கள்.. இந்த கோடை விடுமுறையில், லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்வார்கள் என்பதால், டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மாற்றங்களை இந்திய ரயில்வே கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திருந்தது.

பயணிகள் வசதி
அதன்படி, பயணிகள் வசதிக்காக அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு காலம் ஒரே நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது... எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர்பாஸ்ட் என எந்த ரயிலாக இருந்தாலும், அனைத்து ரயில்களுக்கும் சரியாக 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்..
தட்கல் மூலம் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளது. AC வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவுகள் காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளை காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்பது போன்ற மாற்றங்களை ரயில்வே கொண்டுவந்துள்ளது.
முன்பதிவு பெட்டிகள்
இப்படிப்பட்ட சூழலில், ரயிலில் முன்பதிவு பெட்டிகளிலும் சில வசதிகள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. அதாவது, ரிசர்வேஷன் செய்யாத பயணிகளும், திடீரென முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணிக்கிறார்கள்.. இதனால் ரிசர்வ் செய்தவர்கள் பெரும் அவதிக்கு ஆளாக நேரிடுகிறது.. இதனை தடுப்பதற்காகவும், கண்காணிப்பதற்காகவும், சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கிறது..
இதர பயணியர் பயணம் செய்வதை தடுக்கவே இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவு ரயில்களில், டிக்கெட் பரிசோதகர்கள் குழுவினர், திடீர் திடீரென சோதனைகளை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
ரிசர்வ் செய்யாதவர்கள்
அதன்படி, சென்னை - கோவை, திருச்சி, மதுரை வழித்தடங்களில் செல்லும் ரயில்களில், ரயில்வே பாதுகாப்பு படை குழுவினரும் சோதனை நடத்தி வருகிறார்கள்.. ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் உள்ளனர். ரிசர்வ் பெட்டிகளில், யாராவது, முன்பதிவு செய்யாதவர்களும் ஏறிவிடுகிறார்களா? பெட்டிகளை ஆக்கிரமித்துவிடுகிறார்களா? என்பதை கண்காணிக்கிறார்கள்..
அப்படியா யாராவது ஆக்கிரமித்திருந்தால் அந்த பயணிகளுக்கு ஸ்பாட்டிலேயே அபராதமும் விதிக்கிறார்கள். அவர்களிடம் உரிய டிக்கெட் இல்லை என்றால், கீழே இறக்கி விடப்பட்டு, முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
டிக்கெட்டே இல்லாமல் வித்-அவுட்டில் வருவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது... ரயில்வே பாதுகாப்பு படையின் இந்த அதிரடியானது ரிசர்வேஷன் செய்து பயணிப்போருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் கோடை விடுமுறையில் வழக்கத்தைவிட, பயணிகள் கூட்டம் நிறைந்துள்ள நிலையில், ரயில்வேயின் இந்த ஏற்பாடு மிகுந்த வசதியையும் தந்து வருகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications