Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள் - ஈபிஎஸ், டிடிவி தினகரன்

அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீ உணவு உண்ணக் கூடாது என்கிற தத்துவத்தின் அடிப்படையில்தான் இல்லாத ஒரு ஏழை எளியோருக்கு கொடுக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்லாமிய பெருமக்களின் புனித நாளான ரமலான் நன்னாளில் ஈகை குணமும், சகோதரத்துவமும், ஒற்றுமையும் ஓங்கப்பெற்று இறைவனின் அருட்கொடையால் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார். ஈகைத்திருநாளான ரமலான் பெருநாளைக் கொண்டாடும் நேசத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் இரண்டு கடமைகள் ரமலான் மாதத்தில் கடைபிடிக்கப்படுகின்றன. அதாவது சூரிய உதயத்துக்கு முன் உணவு உண்டு, இடையில் அன்னம் தண்ணீர் இல்லாமல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருக்கும் நிகழ்வு ரமலான் மாதத்தின் 30 நாட்களும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கிறார்கள். இது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.

இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று தொடங்கியது. தமிழகத்தில் நேற்று பிறை தென்படாததால் இன்று நோன்பு நாளை ரமலான் பண்டிகையையும் அறிவித்துள்ள தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்துள்ளார்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பெருமக்களின் புனித நாளான ரமலான் நன்னாளில் ஈகை குணமும், சகோதரத்துவமும், ஒற்றுமையும் ஓங்கப்பெற்று இறைவனின் அருட்கொடையால் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் என என்று அவர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Happy Eid-ul-Fitr to all Muslims - EPS, DTV Dhinakaran

டிடிவி தினகரன் வாழ்த்து

ஈகைத்திருநாளான ரமலான் பெருநாளைக் கொண்டாடும் நேசத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஈகைத் திருநாளான ரமலான் பெருநாளை கொண்டாடும் நேசத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோர்க்கு கொடுத்து, இறைவனை வணங்கி இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ரமலானை கொண்டாடுகிறார்கள் .

புனித ரமலான் நாளில் நபி பெருமகனார் போதித்த அன்பு, ஈகை, மனிதநேயம், கோபம் தவிர்த்தல் போன்ற நற்பண்புகளின் வழியாக சிறந்த மனித சமுதாயத்தை அமைத்திட அனைவரும் உறுதியேற்போம். மேலும் கொரோனா எனும் பேரிடர்களில் இருந்து மனித குலம் முற்றிலுமாக மீண்டும் எழுச்சி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்ததற்கான நம்பிக்கையை நம்மைச் சுற்றியிருக்கிற அனைவரும் ரமலான் பெருநாள் விதைதிடுவோம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Happy Eid-ul-Fitr to all Muslims - EPS, DTV Dhinakaran

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

நாடெங்கும் ஈகைத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு ஈகைத் திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், மனிதர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்று மக்கள் என்று பிரகடனப்படுத்துகிறது இஸ்லாம்.மனிதர்களில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அடையாளப்படுத்துகிறது இஸ்லாம்.

அமைதி,மனிதர்களுக்கு சேவை செய்தல், குழந்தைகளிடம் அன்பு செலுத்துதல்,பெண்களின் உரிமைகளைப் பேணுதல்,குடும்ப உறவுகளை அரவணைத்தல்,பிற சமயத்தவர்களின் உணர்வுகளை மதித்தல்,அவர்களோடு அன்புடனும்,மனிதநேயத்துடனும் நடந்து கொள்ளுதல் போன்ற நல்லுபதேசங்களை சொல்கிறது இஸ்லாம்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில்,இஸ்லாம் வலியுறுத்துகின்ற தன்மைகளை முஸ்லிம் சமுதாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும்,மதவெறி,வன்முறை,சமூகக் கொடுமைகள் போன்ற மனிதநேயத்திற்கு எதிரான செயல்கள் நீங்கி,அமைதியும்,அன்பும்,சமூக நல்லிணக்கமும் தழைக்கவும்,பிறருக்கு ஈந்து உதவும் பண்பு வளர அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றும் மகிழ்ச்சி பொங்கும் இந்த ஈகைத் திருநாளில் உறுதி ஏற்போம் எனவும் முஹம்மது ஷிப்லி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+