"வாழைப்பழத்துடன்" கிட்ட போன ஜி.கே. மணி.. பட்டுனு மாடுகள் தந்த ரியாக்ஷன்.. அதுவும் அந்த தொண்டர்.. ஓஓ
வாழைப்பழத்தை மாடுகளுக்கு ஊட்டி சமத்துவ பொங்கல் கொண்டாடினார் ஜிகே மணி
சென்னை: நாட்டுப்புற கலைஞர்கள், பொதுமக்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு வேட்டி சேலை கேடயங்களை பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிகே மணி வழங்கினார்.. அத்துடன் மூத்த தலைவர் ஜிகே மணி கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவின் வீடியோ ஒன்றும் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.
பொங்கல் தினத்தை முன்னிட்டு பாமகவினர் கட்சி கொடியேற்றி பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.. அந்தவகையில், பென்னாகரத்தில் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.
பென்னாகரம் அருகே உள்ள, நாகரை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், பாமகவின் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

மண் பானை
இந்த விழாவில், பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கலிட்டு காளைகளுக்கு பூஜை செய்யப்பட்டது. பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், பாமக கௌரவ தலைவருமான ஜிகே மணி, இதில் கலந்து கொண்டார்.. மேலும், தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, மாவட்ட தலைவர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் பென்னாகரம், ஏரியூர் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பா.ம.க. கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கலர் கலர் மாடுகள்
இந்த நிகழ்ச்சியில் சூரியனுக்கு பொங்கல் வைத்தும் மாடுகளுக்கு வண்ணம் தீட்டியும் மகிழ்ந்தனர்.. இயற்கைக்கு நன்றி சொல்லுவோம் - கால்நடைகளுக்கு நன்றி சொல்லுவோம் - மழைக்கு நன்றி சொல்லுவோம் - சூரியனுக்கு நன்றி சொல்லுவோம் மண்ணுக்கு நன்றி சொல்லுவோம் - மலைக்கு நன்றி சொல்லுவோம் என்று அனைவரும் கோஷமிட்டு சிறப்பாக கொண்டாடினார்கள். கலைஞர்கள், பொதுமக்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு பரிசுகள் கேடயங்களை வழங்கிவாழ்த்து தெரிவித்தார்.

துண்டுகள் சேலை
அதேபோல, இதில் கலந்துகொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாரம்பரிய உடையான வேட்டி - சேலை - துண்டுகள் வழங்கப்பட்டன.. அதனை தொடர்ந்து பாரம்பரிய கலைகளை நினைவுப்படுத்தும் வகையில், கும்மிப்பாட்டு, மான்கொம்பு சண்டை, சிலம்பாட்டம் கும்மிப்பாட்டு, நெருப்பு வளையம் சுற்றுதல், பம்பை இசை, வாள் தற்காப்பு, தெய்வ வேடமணிந்து நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, பொங்கல் வைத்து சாமி கும்பிட்டதும், அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாடுகளிடம் சென்றார் ஜிகே மணி.. வாழைப்பழங்களை எடுத்து ஒரு மாட்டிற்கு வழங்கினார். ஆனால், அந்த மாடு வாயை திறக்க மறுத்தது.

வாழைப்பழம்
இதனால், அருகில் நின்றிருந்த தொண்டர் ஒருவர், அந்த மாட்டின் வாயை திறக்க வைத்து, வாழைப்பழத்தை வாயில் திணிக்கும் நிலை ஏற்பட்டது.. பிறகு, மீண்டும் வாழைப்பழத்தை உரித்து எடுத்துக் கொண்டு, இன்னொரு மாட்டின் வாய் அருகில் கொண்டு சென்றார் ஜிகே மணி.. ஆனால், அந்த மாடும் வாயே திறக்கவில்லை.. மனம் தளராத ஜிகே மணியோ, அருகில் நின்ற இன்னொரு மாட்டிற்கு வாழைப்பழத்தை ஊட்ட முயன்றார்.. அந்த மாடும் வாழைப்பழத்தை பார்த்ததும் வாய் திறக்கவில்லை.. காரணம், இந்த எல்லா மாடுகளுமே ஏற்கனவே நன்றாக சாப்பிட்டு விட்டனவாம்.. அதனால்தான் வாழைப்பழத்தை சாப்பிடவில்லை என்று கூறப்பட்டது. விடாமுயற்சியுடன் மாடுகளுக்கு ஜிகே மணி வாழைப்பழம் ஊட்டும் இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications