"குட் பை 2022".. புத்தாண்டு கொண்டாட்டம்.. எங்கெல்லாம் அனுமதி இல்லை, எதற்கெல்லாம் கட்டுப்பாடு பாருங்க
புத்தாண்டு கொண்டாடுவதற்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்
சென்னை: 2022ம் ஆண்டு இன்றுடன் விடைபெறும் நிலையில், புத்தாண்டை வரவேற்கவும், உற்சாகமாக கொண்டாடவும் உலக மக்கள் தயாராகி வருகிறார்கள்.. கொரோனா பரவல் இப்போது சற்று அதிகரிக்கும் நிலையில், தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன... புத்தாண்டு கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக கோவில் செல்லுதல், கேக் வெட்டி கொண்டாடுதல், பைக்குகளில் கொண்டாட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல் என்று வாழ்த்துக்களை பகிர்ந்து மக்கள் புது வருட பிறப்பை கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், அப்படி கொண்டாடும்போது எதிர்பாராத விபத்துகள், அசம்பாவிதங்கள் போன்ற தவறான நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு, அந்தந்த மாநகராட்சி காவல்துறையினர் வழிகாட்டு நெறிமுறைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்டார் ஹோட்டல்கள்
புத்தாண்டு கொண்டாட்டத்தை எந்தவித அசம்பாவிதங்கள் மற்றும் பிரச்சனைகள் இன்றி கொண்டாடுவதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த மாநகராட்சியின் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.. அதன்படி, சென்னை மாநகரை பொறுத்தவரை, பாதுகாப்புக்காக 16 ஆயிரம் காவலர்களும், ஆயிரத்து 500 ஊர்காவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னை மெரினாவில் மணல் பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனினும்கூட, இரவிலும் ட்ரோன் மூலம் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆபாச நடனம்
சென்னையில் ஸ்டார் ஹோட்டல்களில் ஆபாச நடனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது... நீச்சல் குளங்களை மூடவும், மதுகூடங்களை அனுமதித்த இடங்களில் மட்டுமே நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனத்தை இயக்குவோரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் சாலைகளில் பல இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. வாகன ஓட்டிகள் கவனிக்கும் வகையில் அவைகளில் ஒளிரூட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.

வனப்பகுதி
அதேபோல, கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான ரிசார்ட்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ளன.. இவைகளுக்கு வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. முக்கியமாக, அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது, அதிக ஒளி உமிழும் விளக்குகளை உபயோகிக்கக்கூடாது. மேலும், Camp Fire பயன்படுத்தக் கூடாது, வனப்பகுதிக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பைக்குகள் ரேஸ்
மதுரை மாநகரில், புத்தாண்டில் பைக்ரேசில் ஈடுபவர்களை கண்காணிக்க தனிப்படைகள், வழிபாட்டுத்தலங்களில் குழப்பம் விளைவிக்க முயல்வோர் கைது செய்யப்படுவர் என்று புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மதுரை மாநகர காவல்துறை... புத்தாண்டு தினத்தையொட்டி இன்றைய தினம் இரவு பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட மதுரை மாநகர காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.. குறிப்பாக, இன்று அதாவது 31ம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், வீடுகளிலேயே புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

குதூகலம்
நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை... 1300 காவல்துறையினர் மற்றும் 100 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மதுரை மாநகர் முழுவதும் வாகன சோதனை செய்யப்பட உள்ளது... இரவு பொதுமக்கள் யாரும் தேவையின்றி பைக்குகளில் சுற்றுவதைத் தவிர்க்கவும், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

ரோந்து பணி
அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள். வெளியூர்களுக்கு செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்டருகில் காவல் ரோந்து ஏற்பாடு செய்யப்படும்... கேளிக்கை விடுதிகளில் நடைபெறும் கொண்டாட்டங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வோர் காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

பைக் ரேஸ்
பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கபடும். மற்றும் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் பற்றி காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க மதுரை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது காவல்துறை. மேலும் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள், நாளை மாலை முதல் அனைத்து வழிபாட்டு தலங்கள், மாநில மற்றும் மாவட்ட எல்லைகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வேகமாக வாகனங்களை இயக்குபவர்கள், மது அருந்தி வாகனங்களை ஓட்டுபவர்கள், சாகச பயணம் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது!












Click it and Unblock the Notifications