100 நாள் வேலை திட்டத்தில் NO:1 யார்னு தெரியுமா? உயரும் பெண்களின் பங்கு.. மகிழ்ச்சியில் தென் மாநிலம்
சென்னை: பெண்களின் அபரிமிதமான ஆதரவை தென்மாநிலங்கள் பெற்று கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், 100 நாள் வேலை திட்டம் குறித்து குட்நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது என்ன தெரியுமா?
இந்தியாவின் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலை திட்டம்) இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

பெண்கள்: வேலைவாய்ப்பை தரும் இந்த திட்டத்தின்கீழ், குளங்களை தூர்வாருவது, கால்வாய்களை பராமரிப்பது, அரசுக்கு சொந்தமான காடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது என்று ஏராளமான அரசு சார்ந்த பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் 13.13 கோடி பயனாளிகள் உள்ளனர்..
தமிழ்நாட்டிலும் இந்த நடைமுறை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.. தமிழகத்தில் மட்டும் 89 லட்சத்து 3 ஆயிரத்து 310 பயனாளிகள் இருக்கிறார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பங்கேற்பை எளிதாக்க குழந்தைகள் காப்பகத்திற்கான ஏற்பாடு, இருப்பிடம் அருகிலேயே பணி என்பது உள்பட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன
ஊதிய உயர்வு: முதலில், ஒரு நாள் கூலித்தொகை ரூ.281-ஆக இருந்த நிலையில், ரூ.294 ஆக உயர்த்தப்பட்டது.. அதேபோல, 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கே வராதவர்களின் பெயரை சேர்த்து, பணத்தை முறைகேடு செய்வதாக புகார் எழுந்ததையடுத்து, இந்த முறைகேடுகளை களையும் நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொண்டது.
சமீபத்தில்கூட புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது.. அதன்படி, ஒருவர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வருமானம் பெறுகிறார் என்றால், அவர் ஆதார் அடிப்படையிலான பேமெண்ட் முறை அதாவது யுபிஐ அல்லது வங்கியின் மூலமாக மட்டுமே பணம் பெற முடியும்.. தீவிரவாதிகள், வெளிநாட்டினர் இந்த திட்டம் மூலம் வருமானம் பெறக்கூடாது என்பதற்காக ஆதார் முறையும் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாலும், ஆதார் பேமண்ட் இருப்பதால், பெரும்பாலானோரால் வருமானம் பெறுவதில் சிக்கல் உள்ளது.
தினக்கூலி: இதுஒருசிக்கல் என்றால், மற்றொருபக்கம், சமீபத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலி போதுமானதாக இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.. பணவீக்கம் பலமடங்கு அதிகரித்துள்ள தினக்கூலி போதுமான இல்லை என்றும், ரூ.400 வழங்க ஊதியம் வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது..
கிராமப்புற இந்தியாவுக்கு மோடி செய்யும் துரோகத்தின் சாட்சியாக இந்த திட்டம் உள்ளதாக மூத்த தலைவர் கார்கே சில நாட்களுக்கு முன்பு காட்டமாக கூறியிருந்தார்.
வேலைவாய்ப்பு உறுதி: இந்நிலையில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தரவு தளம், கடந்த நிதி ஆண்டில் (2023-24) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு தொடர்பாக மாநிலங்கள் வாரியான விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், 89.27 சதவீதம் பெற்று கேரளா முதல் இடத்தில் உள்ளது. 87.39 சதவீதம் பெற்று புதுச்சேரி 2-ம் இடத்திலும், 86.66 சதவீதம் பெற்று தமிழகம் 3-ம் இடத்திலும் உள்ளது.
பங்களிப்புகள்: மிகவும் குறைவாக ஜம்மு காஷ்மீர் 32.16 சதவீத பங்களிப்பு மட்டுமே கொடுத்திருக்கிறது. கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே 70 சதவீதத்துக்கு அதிகமான பெண்களின் பங்கேற்பினை தந்திருக்கின்றன. 50 முதல் 70 சதவீத பங்களிப்பினை 16 மாநிலங்களும், 50 சதவீதத்துக்கு குறைவான பங்களிப்பினை 14 மாநிலங்களும் வழங்கியிருக்கின்றன" என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அந்தவகையில் தென்மாநிலமே முன்னணியில் உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications