அண்ணா சாலை துள்ளுது.. தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரை சல்லுன்னு பரவும் மகிழ்ச்சி.. சென்னைக்கு ஹேப்பி
சென்னை: அண்ணா சாலையில் புதிய பாலம் வரப்போவதால் இதற்கான எதிர்பார்ப்புகள் கூடிவருகின்றன.. இதுகுறித்து அதிகாரிகள் சொல்வது என்ன?
அண்ணா சாலை மிகவும் பழமை வாய்ந்தது என்றாலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.. சென்னையின் இதய துடிப்பே, இந்த அண்ணா சாலையில்தான் அமைந்துள்ளது எனலாம். அதனால்தான், போக்குவரத்து நெரிசல் இன்றுவரை அதிகரித்து காணப்படுகிறது..

தேனாம்பேட்டை: குறிப்பாக, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள 3.5 கி.மீ தூரத்தை கடக்க வேண்டுமானால், எப்படியும் அரை மணி நேரமாகிவிடுகிறது.. இதனால் ஏராளமான வாகனங்கள் நந்தனம் சந்திப்பு, சிஐடி நகர் சந்திப்புகளில் 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு வரிசைகட்டி நின்றுவிடுகின்றன..
இதை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும், நெடுநேரம் பீக்ஹவர்களில் காத்திருக்க கூடாது என்பதற்காகவும், அண்ணா சாலையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 ரூபாய் கோடியில் 4 வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
உயர்மட்ட சாலை: 3.20 கி.மீ நீளத்திற்கு 14 மீட்டர் அகலம் கொண்ட 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன... அதாவது, அண்ணா சாலையுடன் இணைக்கும் முக்கிய சந்திப்புகளில் இதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டன.. இறுதியில், கடந்த ஜனவரி மாதம் இதற்கான கட்டுமான பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். உடனடியாக அண்ணா சாலையில் கட்டுமானத்திற்கான பணிகளும் துரிதமாகி உள்ளது.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, "அண்ணா சாலையின் மெட்ரோ ரயிலின் சுரங்க பாதை செல்வதால், சுரங்கப்பாதைகள் பாதிக்காதவாறு, தூண்கள் வடிவமைப்பது சவாலாகவே இருந்தது..
சவால்கள்: அதேபோல, பாலத்தின் அடித்தளம் அமைக்க ஆழமான பள்ளங்களை மற்றும் நீண்ட துளைகளை எடுக்க முடியாத சூழலும் இருந்தது. மண்ணின் தாங்கும் திறன் குறைவாக இருப்பதால், ஆழம் குறைந்த அடித்தளம் கொண்டு வடிவமைப்பதும் முடியாத காரியம்..
இத்தனை சிக்கல்கள் இருந்ததால், தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இறுதியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வல்லுநர்கள், ஐஐடி மெட்ராஸ் வல்லுநர்கள் மற்றும் இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்த உயர்மட்ட சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பணிகள்: இந்த திட்டத்தில், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, இரும்பினாலான முன்வார்க்கப்பட்ட கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தி கட்டுமான பணிகள் ஆரம்பமாகின..
3 ஒப்பந்ததாரர்களுக்கு கட்டுமான பணியானது வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருபகுதியாக ஜே.கே. நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. இந்த ஜே.கே. நிறுவனமானது, தற்போது மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை துவங்கியிருக்கிறது.. இது விரைவில் முடிவடைந்துவிடும் என்கிறார்கள்.
இந்த பணிகள் மட்டும் முடிந்துவிட்டால், முதல் உயர்மட்ட சாலை என்ற பெருமை தமிழகத்துக்கு கிடைக்கும். அத்துடன், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தூரத்தை, ஜஸ்ட் 5 நிமிஷத்திலும் கடந்து விடலாமாம். மொத்தத்தில் சென்னைவாசிகளுக்கு குஷிதான்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications