நகர்ப்புற ஏழைகளுக்கு 8,677 வீடுகள் விரைவில்! கோவை, சென்னைக்கு ஹேப்பி.. வீட்டு வசதி வாரியம் குட்நியூஸ்
சென்னை: நகர்ப்புற ஏழை மக்களுக்கான மறுவாழ்வு என்ற அடிப்படையில், சென்னை மற்றும் கோவையில் சிறப்பு திட்டங்களை, வீட்டுவசதி வாரியம் உருவாக்கியிருந்த நிலையில், அதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது புதிதாக வீடு வாங்குவோரிடையே பெருமகிழ்ச்சியையும் உண்டுபண்ணி வருகிறது.
தமிழகத்தில், நகர்ப்புற ஏழை மக்களுக்கான, வீட்டுவசதி திட்டங்களை, மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்தி வருகிறது.

வீட்டு வசதி வாரியம்: அந்தவகையில், நலிந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த, நடுத்தர, உயர் வருவாய் என, பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வீடு, மனைகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒதுக்கி வருகிறது. ஓரளவுக்கு வருவாய் உள்ளவர்கள், வங்கிக்கடன் வாயிலாக, இந்த வீடுகளை வாங்கலாம்.
வீடுகளை ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தொகையை தவணை முறையில் செலுத்தி வர வேண்டும். மாதத்தவணை திட்டம், மொத்த கொள்முதல் திட்டம் மற்றும் சுயநிதி திட்டம் போன்றவற்றின் அடிப்படையில் இந்த வீடுகளும் ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. அப்படி குடியிருப்புகளுக்குரிய முழுத்தொகையும் செலுத்திய பிறகு, கிரயப்பத்திரமும் உரிமையாளர்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட்டுவிடும்..
ஒருவேளை, முழு பணத்தையும் செலுத்தியிருந்தும்கூட, விற்பனை பத்திரத்தை பெறாதவர்கள், நிலுவைத்தொகை உள்ளவர்கள் விரைவாக விற்பனை பத்திரம் பெறும்வகையில், செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.. ஒருவேளை உரிய காலத்தில் தவணை தவறினால், வட்டிக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல, நிலுவைத் தொகையை பலரும் செலுத்தாததால், "அபராத வட்டி தள்ளுபடி திட்டம்" சமீபத்தில் கொண்டுவரப்பட்டது.
பயனாளிகள்: இப்படிப்பட்ட சூழலில், நகர்ப்புற ஏழை மக்களுக்கான மறுவாழ்வு என்ற அடிப்படையில், சென்னை மற்றும் கோவையில் சிறப்பு திட்டங்களை, வீட்டுவசதி வாரியம் உருவாக்கியிருந்தது.. அதன்படி, சென்னை எர்ணாவூரில், 6,877 வீடுகள், கோவை பெரியநாயக்கன் பாளையத்தில், 1,800 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த 2 திட்டங்களிலும், கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டிருப்பதால், வீடுகள் விரைவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "சென்னை எர்ணாவூரில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.. இந்த பணிகள் முழுமையாக முடிந்ததுமே, வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பயனாளிகள் தேர்வு முடிக்கப்பட்டு விட்டது.
கோவை சாவி: அதேபோல, கோவை பெரியநாயக்கன் பாளையம் திட்டத்தில், தலா, 12 லட்ச ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு, பங்களிப்பு தொகை செலுத்திய, 1,000 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் சிலருக்கு வீட்டுக்கான சாவி வழங்கும் பணிகளும் நடந்து வருகின்றன. மிச்சமுள்ள 800 வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு நடக்கிறது. இந்த பணிகள் முடிந்ததும் வீடுகள் ஒப்படைக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications