தலைநிமிறுது சென்னை.. விரைவில் வருகிறது "நெமிலி".. தமிழக அரசு சர்ப்ரைஸ் பாருங்க.. சென்னைவாசிகள் குஷி
சென்னை: சென்னைவாசிகளின் மனம் குளிரும்வகையிலான ஒரு அறிவிப்பினை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்றைய பட்ஜெட் உரையில் வெளியிட்டுள்ளார். என்ன அது?
சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இன்று காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முறையாக பட்ஜெட் தாக்கலை செய்துள்ளார்.

"தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டதுமே இதற்கான எதிர்பார்ப்பை எகிற துவங்கிவிட்டது.
எம்பி தேர்தல்: பொதுவாக தேர்தல் நேரங்களில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிப்புகளும், சலுகைகளும் கொஞ்சம் கூடுதலாக இடம் பெற்றிருக்கும்... அந்த வகையில் விரைவில் எம்பி தேர்தல் நெருங்குகிறது..
எனவே, இந்த நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று தமிழக மக்கள் பரவலாக எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, தமிழக பட்ஜெட் "7 மாபெரும் தமிழ் கனவு" என்ற தலைப்பின் கீழ் தாக்கல் செய்யப்படுகிறது.. முக்கியமாக, சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம், தாய்த்தமிழும் தமிழர் பண்பாடும் என்ற 7 தலைப்புகளில் இந்த பட்ஜெட்டின் சாராம்சம் அமைய உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததால், இந்த பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னைவாசிகள்: அந்தவகையில், சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் பிரச்சனைக்கு பட்ஜெட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. சென்னை பெருநகரத்தை பொறுத்தவரை, நாளுக்கு நாள் உயர்ந்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. இதில் முதன்மையானதும், முக்கியமானதும் குடிநீர் பிரச்சனையாகும்.
தற்சமயம், சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாரத்திற்கு ஒருமுறை அல்லது 2 முறை என்ற ரீதியில்தான் குடிநீர் வாரியம் சார்பில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.. அதனால்தான், சில மாதங்களுக்கு முன்பு, ஒடிசா மாநில நீர் கழகத்துடன் சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வாரியம் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருந்தது. இதன்மூலம், கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
குடிநீர்வாரியம்: 1,958 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தமும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் கையெழுத்தானது. இந்த நடவடிக்கையானது, சென்னைக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், இன்றைய தினம், சென்னை மக்களுக்கு குடிநீர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தம் 1517 கோடி ரூபாய் மதிப்பில் நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
குளிர்கிறது சென்னை: அதுமட்டுமல்ல, சென்னைவாசிகள் மக்கள் பயன்பெறும் வகையில் 150 மில்லி லிட்டர் கொள் திறன் கொண்ட இந்த நிலையம் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும், அமைச்சர் தன்னுடைய பட்ஜெட் உரையில் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
வழக்கமாக கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும்.. ஆனால், விரைவில் வெயில் காலம் துவங்க உள்ள நிலையில், தமிழக அரசின் இந்த பட்ஜெட் அறிவிப்பானது, சென்னைவாசிகளை குளிர வைத்து வருகிறது..












Click it and Unblock the Notifications