சம்பளம் ஒரேயடியா ஏறுதே.. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு தரப்போகும் சர்ப்ரைஸ்.. பணபலனை பாருங்க
சென்னை: விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் வரலாம் என்ற தகவல்தான் பரபரத்து வருகிறது.. என்ன காரணம்?
7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, கடந்த 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது..

அறிவிப்பு: இதையடுத்து, மற்ற கொடுப்பனவுகளும் உயர்த்தப்படுமா? என ஊழியர்கள் பலரும் எதிர்பார்த்தபடியே காத்திருந்தனர்.. இந்நிலையில் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தியதன் மூலம் விடுதி மற்றும் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை மானியங்கள் 25 சதவீதம் வரை திருத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்... அதுமட்டுமல்ல, அது தொடர்பான நிலுவை தொகையும் வழங்கப்படும் என்றும் கூறியிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
ஊதியக்குழு: அதேபோல, 8வது ஊதியக்குழு எப்போது அமைக்கப்படும் என்ற விவாதமும் அதிகமாகவே நடந்து வருகிறது.. எப்போதுமே 10 வருடத்துக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழு அமைக்கப்படும்.. அந்தவகையில், 7வது ஊதியக்குழு 2013ல் உருவாக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 2016 முதல் அமல்படுத்தப்பட்டன...
இதில் ஃபிட்மென்ட் ஃபேக்டரை அடிப்படையாகவைத்து, 2.57 மடங்கு உயர்த்தி, சம்பளம் 14.29% ஆக உயர்ந்தது.. அதன் அடிப்படை சம்பளமும் ரூ.18000 ஆக எகிறியது.
சம்பளம்: இதன் அடிப்படையில், 2025-26ல் 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57ல் இருந்து 3.68 ஆக உயரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. அப்படியானால், சம்பளம் 44.44 சதவீதம் அதிகரிக்கும் என்றும், குறைந்தபட்ச சம்பளம் ரூ.26000 ஆக உயர்த்தப்படும் என்றும் தகவல்கள் கசிந்தபடியே உள்ளன.. இது நிறைவேறும்பட்சத்தில், ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும்.. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் அரசு தரப்பிலிருந்து வரவில்லை.
இந்நிலையில், இன்னொரு முக்கியமான தகவல் கசிந்து உள்ளது.. அதாவது, இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.. இந்த கடிதத்தில் 8வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்த சில முக்கிய தேவைகள் மற்றும் அம்சங்கள் பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.
ஊதியக்குழு: 8வது ஊதியக் குழுவில் எந்த திட்டமும் இல்லை என்று பாராளுமன்றத்திலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றாலும், எனவே, தேர்தலுக்குப் பிறகு அமையப்போகும் புதிய அரசாங்கம், 8வது ஊதியக் குழுவை நிச்சயம் அமல்படுத்தும் என்கிறார்கள்.. அப்படி 8வது ஊதியக்குழு அமையும் பட்சத்தில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளத்தில் நல்ல மாற்றம் தென்படும் என்கிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications