அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி.. ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.. இனி லீவு ஈசியா எடுக்கலாம்: வந்தது களஞ்சியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக்கல்வித் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு மற்றும் இதர பலன்களை பெற களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இது இன்று புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த புதிய மாற்றம் எந்த வகை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பொருந்தும்? மற்றும் எந்த வகையில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்? என்ன மாதிரியான மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கிறது? போன்ற விவரங்களை பார்க்கலாம்.

government employees

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் களஞ்சியம் என்ற மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊழியர்கள் தங்களது விடுப்பு, சம்பளம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி போன்ற விஷயங்களை எளிதாக மேற்கொள்ள முடியும்.

களஞ்சியம்: பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு களஞ்சியம் மொபைல் ஆப் முழு வீச்சில் தயாராகிவிட்டது.. இதிலுள்ள குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், களஞ்சியம் மொபைல் ஆப் இன்று முதல் அதாவது ஜனவரி 1, 2025 முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வரஉள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த சுற்றறிக்கையில், "களஞ்சியம் மொபைல் ஆப் மூலம் குறிப்பாக பே ஸ்லிப் (Pay Slip), பே ட்ரான் (Pay Drawn?), பர்டிகுலர்ஸ் (Particulars) போன்ற தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றுக்கு களஞ்சியம் மொபைல் ஆப் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

பண்டிகை காலம்: பண்டிகை காலத்தில் முன்பணம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம் ஆகியவற்றுக்கும் களஞ்சியம் மொபைல் ஆப் மூலமாக விண்ணப்பிக்கலாம். இது சார்ந்த செயல்முறை ஆணைகளை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் உள்ள தொகையை சரிபார்த்துக் கொள்ள முடியும். மேலும் வருடாந்தர நேர்காணலை இந்த செயலியின் மூலம் ஓய்வூதியர்கள் மேற்கொள்ளலாம். மேலும் பே ஸ்லிப் (Pay Slip), பே ட்ரான் (Pay Drawn?), பர்டிகுலர்ஸ் (Particulars), ஃபார்ம் 1 ஜி‌ (Form 1G) ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அறிவுறுத்தல்: எனவே களஞ்சியம் மொபைல் ஆப்பை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது சார்ந்து அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த களஞ்சியம் மொபைல் ஆப் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் சம்பளக் கணக்கு அலுவலகம் (வடக்கு), சென்னை-01ஐ தொடர்பு கொள்ளலாம்" என்று அந்த சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்ல, பண்டிகை காலத்தில் முன்பணம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம் ஆகியவற்றுக்கும் களஞ்சியம் மொபைல் ஆப் மூலமாக விண்ணப்பிக்கலாம். இது சார்ந்த செயல்முறை ஆணைகளை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்... அத்துடன், பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் உள்ள தொகையை சரிபார்த்துக் கொள்ள முடியும். வருடாந்தர நேர்காணலை இந்த செயலின் மூலம் ஓய்வூதியர்கள் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+