18 மாத DA அரியர்.. ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ஏறுதா? ஓய்வூதியதாரர்களுக்கு வருது அறிவிப்பு
சென்னை: மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் ரூ. 34,500 வரை உயரும் என்று கணிக்கப்படுகிறது.
8வது சம்பள கமிஷன் அமைக்கப்போவது தொடர்பான பல்வேறு செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளன.. இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பதை தீர்மானிக்க ஃபிட்மென்ட் காரணி முக்கியமானது என்பதால், ஃபிட்மென்ட் குறித்த பேச்சும் அடிக்கடி அடிபடுகிறது.

அந்தவகையில், கடந்த 7வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.. இதனால் தொழிலாளர்களுக்கான குறைந்த ஊதியம் 7,000 ரூபாயிலிருந்து 17,990 ரூபாயாக உயர்ந்தது. 8வது ஊதியக் குழு 2026ல் அமைக்கப்படும் என்று தெரிகிறது.. எனினும், அது எப்போது அமல்படுத்தப்படும் என்று இதுவரை உறுதியாக தெரியவில்லை.
தொழிலாளர்கள்: ஆனால், அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களும், ஓய்வு பெற்ற ஊழியர்களும் அதிக சம்பளம் பெற விரும்புகிறார்கள்.. காரணம், 10 வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே ஊதிய மாற்றங்கள் ஏற்படுவதால், அதிக ஊதியம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொழிலாளர்களிடம் ஏற்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், 8ஆவது ஊதியக் குழுவை அமைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 34,500 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 2.86 மடங்கு உயரலாம்...
சம்பளம்: இப்போதைய 7வது ஊதியக் குழுவின்கீழ் 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணி பயன்படுத்தப்படுகிறது... இதன் காரணமாக குறைந்தபட்ச சம்பளம் 7,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. 8வது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் காரணியை 2.86 ஆக மாற்றலாம். அப்படி மாற்றும்பட்சத்தில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 34,500 ஆக இருக்கும். இது 186 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியமும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் 9,000 ரூபாயாக உள்ள நிலையில், இது 2.86 என்ற ஃபிட்மென்ட் காரணியின்படி 25,740 ரூபாயாக அதிகரிக்கலாம்.. இவைகளுடன் அகவிலைப்படி உள்ளிட்ட மற்ற சலுகைகளுடன் ஓய்வூதியம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
புத்தாண்டில் குட்நியூஸ்?: புத்தாண்டில் இந்த நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. அல்லது பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் 8ஆவது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிகிறது. எனினும், 8வது ஊதியக் குழு அமல் செய்வது சம்பந்தமாக இதுவரையில் அரசுத்தரப்பில் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications