புறம்போக்கு நிலத்துக்கு பத்திரப்பதிவு? பதிவுத்துறை மீண்டும் அதிரடி! நிலம் வாங்குவோருக்கு குட் நியூஸ்
சென்னை: நிலம் வாங்குவோர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் ஏராளமான அதிரடிகளை தமிழக பதிவுத் துறை மேற்கொண்டு வருகிறது. போலி ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு செய்வது என்பது நாளுக்கு நாள் பெருகி வருகிறது.. பத்திரப்பதிவுகளில் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்காகவே மீண்டும் ஒரு அதிரடி திட்டத்தை பதிவுத்துறை கையில் எடுத்துள்ளது.. அதன்படி, சர்வே எண்களுக்கு வழிகாட்டி மதிப்புகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா?
பதிவுத்துறை மக்களின் வசதிக்காக ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது.. அதன்படி ஒரு நிலத்தின் உரிமையாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள, நிலத்தின் சர்வே எண் அவசியமாகும். இந்த சர்வே எண்களை, அரசு தன்னுடைய வெப்சைட்டில் பதிவிட்டுள்ளது..

அதுபோலவே, நில அளவீடு மற்றும் சர்வே எண்களை பயன்படுத்தி, குறிப்பிட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பையும் கூகுள் மேப்பில் தெரிந்து கொள்ள முடியும். ஒருவரின் நிலம், வீடு யாருக்கு சொந்தம்? சென்ட் எவ்வளவு? என அனைத்தையுமே கூகுள் மேப் மூலம் அறிய முடியும்.
ஜிபிஎஸ் வசதி
village master dashboard என்று கூகுளில் டைப் செய்தால், https://tngis.tn.gov.in/apps/village_dashboard/ என்ற வெப்சைட்டில், சம்பந்தப்பட்ட நிலம், எந்த மாவட்டம்? எந்த தாலுகா? கிராமமா? நகரமா? என்பதை கிளிக் செய்தால், தற்போது நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்தின் சர்வே நம்பரை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
அதேபோல, https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற வெப்சைட்டில், பட்டா சிட்டா விவரங்கள் மட்டுமல்லாமல் அந்த நிலத்தின் உரிமையாளர் யார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அது அரசு நிலமாக இருந்தாலும், அரசு நிலம் என்றே காட்டப்படும்.
அதேபோல, செல்போனில் GPS, புவியிட தகவல் தொகுப்பு வசதியின் பயன்பாடு அதிகமாக உள்ளது.. யார் எங்கிருக்கிறார்கள் என்பதையும் லைவ் லொகேஷன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு Tamilnilam Gioinfo என்ற ஆப் உதவுகிறது. இப்படி பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் பதிவுத்துறை பல்வேறு வசதிகளை செய்து தந்து கொண்டிருப்பதை மறுக்க முடியாது.
புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான உத்தரவை ஹைகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளன. எனினும் இதை அகற்றுவதில் அதிகாரிகள் நிலையில் தயக்கம் உள்ளதாக தெரிகிறது. .
மேலும், பல இடங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தி, ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் பெயரில், அரசு புறம்போக்கு நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொள்கின்றனர்.. கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரிய நிலங்களும் தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.எனவேதான், மேற்கண்ட குறைகளை களைவதற்காக பதிவுத்துறை புதிய அதிரடியை கையில் எடுத்துள்ளது.
நீர்நிலை புறம்போக்கு, கோவில் நிலங்கள்
அதன்படி, நீர்நிலை புறம்போக்கு, கோவில் நிலங்களை, தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்வதை தடுப்பதற்காகவே tamilnilam தகவல் தொகுப்பில், தனி அடையாள குறியீடு அளிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான நிலங்களை போலி ஆவணங்களை பயன்படுத்தி, தனியார் அபகரிப்பதை தடுப்பதற்காக, அரசு நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நீக்கப்பட்டுள்ளது.. அத்துடன், பத்திரப்பதிவுக்கான வெப்சைட்டில், சொத்தின் சர்வே எண்ணை உள்ளீடு செய்யும்போது, அது அரசு நிலமா? என்பதை தானியங்கி முறையில் சரிபார்க்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஒருவேளை அது அரசு நிலமாக இருந்தால், பத்திரப்பதிவுக்கான டோக்கன் பெற முடியாது. அரசு சாராத, முறையான தனியார் நிலமாக இருந்தால் மட்டுமே, பத்திரப்பதிவுக்கான டோக்கன் கிடைக்கும். பதிவுத்துறை தற்போது மேற்கொண்டுள்ள இதுபோன்ற நடவடிக்கைகளால் பத்திரப்பதிவு மோசடிகள் தடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications