போச்சு.. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை திடீர் அதிகரிப்பு.. குடிமகன்கள் தலையில் விழுந்த இடி
டாஸ்மாக் பார்களில் ஜில் பீர் விலை சற்று உயர்ந்துள்ளது
சென்னை: துக்கமோ, சந்தோஷமோ எதுவானாலும் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் லாபம் குவிந்து கொண்டிருக்கும் நிலையில், குடிமகன்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தியும் ஆறுதல் செய்தியும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
2 மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது.. உக்ரைனில் ரஷ்யா எந்நேரமும் போர் தொடுக்கலாம் என்றிருந்த நேரம் அது..!
பீர் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகரிப்பதில் புதிய தடையை எதிர்கொண்டு உள்ளதாகவும், இதற்குக் காரணம் ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் என்றும் கூறப்பட்டிருந்தது.

வெயில் காலம்
உண்மையிலேயே போர் தாக்கம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.. ஆனால், வெயில் காலம் நெருங்கி வரும் வேளையில் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் பீர் விற்பனை அதிகரிக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதம்தான் கோடை காலம் என்று கணக்கில் இருந்தாலும், இப்பவே கண்ணை கட்டும் நிலைமைதான் தமிழ்நாட்டில் உள்ளது.. வெப்பம் சுட்டு தள்ளுகிறது.

இளைஞர்கள்
அதனால், டாஸ்மாக் கடைகளில் பீர் குடிப்பதற்கு இளைஞர்கள் இப்போதே குவிய துவங்கி விட்டனர்.. வழக்கமாக வெயில் என்றால், ஜூஸ் கடைகளுக்கு செல்வார்கள்.. இப்போது ஜில் பீர் தேடி ஓடுகிறார்கள்.. இந்த ஜில் பீருக்கு எப்போதுமே டிமாண்ட் இருந்து கொண்டே இருக்கும் நிலையில், உஷ்ணத்தின்போது, ஜில் பீர்கள் கிடைக்காமல் அல்லாடும் நிலைமையும் இவர்களுக்கு உள்ளது.. ஆனால் எப்படி பார்த்தாலும், டாஸ்மாக்கில் கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

ஜில் பீர்கள்
ஆனால், பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பீர்கள் விற்பது கிடையாது... டாஸ்மாக்குகள் பார்கள் இணைந்து செயல்படும் இடங்களில் மட்டுமே ஜில் பீர்கள் விற்கப்படுகிறது.. ஆனால், விலை அதிகமாக வைத்து விற்கப்படுகிறது.. ஜில் பீர் ரூ.40 முதல் ரூ.50 வரை கூடுதலாக விற்பனை செய்வதாக தெரிகிறது.. இதற்காகவே டாஸ்மாக் கடைகளில் இருக்கும் பீர் பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து கொள்கிறதும் இந்த பார்கள்.. அவைகளை ஜில் ஏற்றி அதிக விலைக்கு விற்று விடுகிறதாம்..

பீர் பெட்டிகள்
தற்போது 5 சதவீதம் வரை பீர் விற்பனை அதிகரித்துள்ளது.. அடுத்த 2 மாதங்களில் ஜில் பீருக்கான தேவை இன்னும் 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. எப்போதுமே ஒன்றரை லட்சம் பீர் பெட்டிகள் விற்பனையாகும் நிலையில், இப்போதெல்லாம் இரண்டு லட்சத்தை தாண்டி பீர் பெட்டிகள் விற்கப்பட்டு வருகிறதாம்.. வெயில் காரணத்துக்காக பீர் விற்பனை மட்டுமே அதிகரித்தாலும், பிராந்தி, ரம், விஸ்கி போன்ற மதுபானங்களின் விற்பனை குறைந்துள்ளது ஆறுதல் தரும் வகையில் உள்ளது.....!












Click it and Unblock the Notifications