ரேஷனில் அதிரடி.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. இனி கலெக்டரிடம் பொருளை காட்டணும்.. அரசு சூப்பர்
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்களில் பல்வேறு சேவைகள் நேரடியாகவே பெறப்பட்டு வருகின்றன.. இதற்கு காரணம், அனைத்து விண்ணப்பங்கள் மீதும் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்ததுதான்.. அந்தவகையில், இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் தொகைக்கு அடுத்தபடியாக விண்ணப்பித்திருப்பது ரேஷன் கார்டுகளைதானாம். எனவே, பலருக்கும் கார்டுகள் விரைவில் கிடைத்துவிடும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய தகவல் ஒன்றினை உணவுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளில், யாரையும் காக்க வைக்கக்கூடாது என்று ஏற்கனவே ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. மேலும், பொருட்களை சரியான அளவில் வழங்க வேண்டும் என்றும், தரமற்ற பொருட்களை விநியோகிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அறிவுறுத்தலை உணவுத்துறை வழங்கியிருக்கிறது.

உணவுத்துறை சூப்பர் தகவல்
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், உணவு வழங்கல் துறை, நுகர்பொருள் வாணிப கழகம், சேமிப்பு கிடங்கு நிறுவனம் போன்றவற்றின், ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது.. இதில், துறை செயலர் சத்யபிரதா சாஹு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, நடப்பு நெல் கொள்முதல் சீசன் முடிவடைய உள்ள நிலையில், கொள்முதல் நிலையங்களில் உள்ள, நெல்லை விரைந்து அரிசி ஆலைகளுக்கு அனுப்புமாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி
இதையடுத்து, பேசிய மாவட்ட வழங்கல் அதிகாரிகள், வாணிப கழக மண்டல மேலாளர்கள், கிடங்கு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், பொது வினியோக திட்ட கூட்டுறவு இணை பதிவாளர்கள், கிடங்குகளில் ஆய்வு செய்து, ரேஷன் பொருட்கள் தரத்தை சோதித்து, அவற்றை கலெக்டரிடம் காட்டி தரமாக இருப்பதை உறுதி செய்த பிறகு, ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய, கிடங்குகளில் உள்ள பொருட்களை, கலெக்டர்களிடம் காட்ட வேண்டும் என்று என, மாவட்ட வழங்கல் அதிகாரிகளை, உணவுத்துறை அறிவுறுத்தியிருப்பது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
புதுக்கோட்டையில் ஒரே பரபரப்பு
இதனிடையே புதுக்கோட்டை ரேஷன் கடையில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துவிட்டது.. புதுக்கோட்டை மாநகராட்சி உட்பட கிளை இரண்டாம் வீதி அருகாமையில் சக்கரவாதி ஐயங்கார் சந்து பகுதியில் அரசு மண்ணெண்ணெய் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மண்ணெண்ணெய் கடையில் வார இறுதி நாட்களில் மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்படுவது வழக்கம்.
குறிப்பாக 1 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்க ஏராளமான ரேஷன்தாரர்கள் வார இறுதி நாட்களில் மண்ணெண்ணெய் வாங்குவார்கள்.. அப்படித்தான் இன்றும் மண்ணெண்ணெய் வாங்க குவிந்தனர்.. ஆனால், வழக்கமாக 9 மணிக்கு திறக்க வேண்டிய கடை 9:45 மணிக்கு திறக்கபட்டது. இதனால் அங்கு 300க்கு மேற்பட்ட மக்கள் முண்டியடித்து கொண்டு மண்ணெண்ணெய் வாங்க முற்பட்டனர்.
விஷ ஜந்துக்கள் 1 லிட்டர் மண்ணெண்ணெய்
1 லிட்டர் மண்ணெண்ணெய்க்காக, முண்டியடித்து கொண்டு சென்றதால், ரேஷன் கடையில் பெரிய தள்ளுமுள்ளு ஏற்பட்டுவிட்டது.. இதில் சிலரது ஆடைகளும் கிழிந்துவிட்டன.. சிலர் நீண்ட நேரம் வெயிலில் நின்றதால், மயக்கம் அடைந்தனர்..
சரியான முறையில் கடைக்கு வந்து, ஊழியர்கள் முறையாக மண்ணெண்ணெய் ஊற்றியிருந்தால் இப்படியொரு நிலைமை வந்திருக்காது என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.. அதுமட்டுமல்ல, முட்புதர்கள் மண்டிக்கிடக்கும் பகுதியில்தான் இந்த ரேஷன் கடை செயல்பட்டு வருகிறதாம். இதனால், வரிசையில் மக்கள் காத்திருக்கும்போது, விஷ ஜந்துக்களும் கடித்துவிடுகிறதாம். எனவே, மேற்கண்ட பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications