குடும்ப அட்டை வைத்துள்ளோருக்கு ஹேப்பி.. ரேஷன் கடையில் எடைத்தராசுடன் பில் மிஷின்! அரசின் குட்நியூஸ்!
சென்னை: ரேஷன் பொருட்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக ரேஷன்தாரர்களுக்கு சில சலுகைகளையும், அறிவிப்புகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. ரம்ஜான் வரவுள்ள நிலையில், வரும் 29ம் தேதி அதாவது சனிக்கிழமை ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அத்துடன் மேலும் ஒரு குட்நியூஸ் அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குடும்ப அட்டை தாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் ஆரம்பித்து நடந்துவருகிறது.. இதில், தொகுதிகளில் நடக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள்..

அந்தவகையில் கூட்டுறவுத்துறையில் ஏற்கனவே கடந்த வாரம் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர், இரு மகிழ்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
விரைவில் வீடு தேடி ரேஷன்
அதில், முதலாவதாக, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைபோல, தமிழகத்திலும், வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழக உணவுத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையைட்டு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, திமுக ஆட்சியமைந்த பிறகு இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதைத்தவிர, தமிழகம் முழுவதும் உள்ள துணைக் கிராமங்களில் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கெர்ணடு வருகிறது" என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எடைத்தராசு - விற்பனை முனைய இயந்திரம்
இந்நிலையில், தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.. அதில், "உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை மண்டலத்தில் உள்ள நியாய விலை அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார். விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகைப் பதிவு, எடைத்தராசில் பொருளை எடைபோட்டு விற்பனை முனைய இயத்திரத்துடன் இணைத்து ரசீது போடுதல் உள்ளிட்ட விவரங்களை விற்பனையாளரிடமும், பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களிடம் ரேஷன் பொருட்களின் அளவு மற்றும் தரம் குறித்தும் கேட்டறிந்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஆய்வின்போது உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் த.மோகன், இணை ஆணையாளர், துணை ஆணையாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்" என்று தெரிவித்துள்ளது.
அதாவது, தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற உணவு பொருட்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. என்றாலும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அரசு நிர்ணயித்த அளவை குறைவாக உள்ளதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது...
எடைத்தராசு - பில் மிஷின்
குறிப்பாக, மாநில எல்லைகளில் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதும் கண்காணிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தவிர, ரேஷன் தொடர்பாக புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்க 1800 599 5950 இலவச புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும், எடைகளில் மாற்றம் உள்ளது உள்ளிட்ட சில புகார்களை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனை சரி செய்யும் விதமாக அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, புதிய வகை தராசுகளை ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இந்த புதியவகை எலக்ட்ரானிக் தராசுகளில் அளக்கப்படும் அளவு உடனடியாக ரசீதாக வழங்கப்படும். எடைத்தராசுடன் பில் மிஷின் இணைக்கப்படுவதால், எடை குறைவு பிரச்சனைகளும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications