ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மெகா அறிவிப்பு.. குட் நியூஸ் சொல்லும் தமிழ்நாடு அரசு.. இனிமே நிம்மதி
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு விரைவில் குட்நியூஸ் ஒன்று வரப்போகிறதாம்.. இது சம்பந்தமான நடவடிக்கைகளில் கூட்டுறவுத்துறை தீவிரமாக இறங்கி வருகிறது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..
இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..
பொங்கல்: அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன. மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, இன்னொரு தகவலும் வெளியிடப்பட்டது.. "ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்" அமலில் உள்ளது. அதாவது, இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எங்கிருந்து வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது.. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆஃப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவால் இனிமேல் ரேஷன் இடையில் குளறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்காது. அதனைப் போலவே இனிமேல் எந்த பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. தமிழக அரசு ரேஷன் கடைகளின் மூலமாகதான் அனைத்துவித மக்களுக்கான நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் கூட்டுறவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக ரேஷன் கடைகளில் அரசு வைபை குறைந்த செலவில் மக்களுக்கு அளிக்கும் திட்டம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இ-சேவை மையங்கள்: இப்போதைக்கு, தமிழ்நாடு முழுவதும் 33,000-க்கும் அதிகமான நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 24,106 கடைகள் முழு நேரமும், 9,708 கடைகள் பகுதி நேரமாகவும் செயல்பட்டு வரும்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இ சேவை வசதியை செயல்படுத்த, கூட்டுறவு துறை திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இ-சேவை மையங்களில் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் தொடங்குவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது.
ரேஷன் கடைகள்: இந்த திட்டத்தின் மூலம் மக்கள் இ-சேவை மையங்களில் மேற்கொள்ளும் அனைத்துவித செயல்பாடுகளையும் ரேஷன் கடைகளிலேயே செய்து கொள்ளலாம். இதன் மூலம் அரசுக்கு கூடுதலான வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக இந்தியா போஸ்ட் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, இந்த திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட உள்ளதாம்..
இதற்காக ரேஷன் கடைகளின் இருப்பிடம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அதாவது பாஸ்போர்ட் சேவை, ஆன்லைன் வாயிலாக சேவை கட்டணம் செலுத்துவது, ஆதாரில் திருத்தம், நீக்குதல் உள்ளிட்ட சேவைகளையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களில் கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் அடுத்த 6 மாதங்களுக்குள் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கிராம புறங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் முன்னுரிமை அடைப்படையில் இ சேவை தொடங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள்.

-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications