அள்ளிப்போடுங்க.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. ரேஷனில் புதுசா இறங்கு போகுது பாருங்க! ஹேப்பி
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பலவிதமான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்து வரும்நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக ரேஷன் கடைகளில், மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இந்த அத்தியாவசிய பொருட்கள், கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை தந்து வருகிறது.

ரேஷன் கடைகள்: எனவே, ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு, ரேஷன் அட்டையிலுள்ள உறுப்பினர்கள் அனைவரும், ரேஷன் கடைக்கே நேரில் வந்து கைரேகை வைத்தால் மட்டுமே, பொருட்கள் வழங்கப்படும் என்றும், கைரேகை பதிவு கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, அந்தியோதயா அன்னயோஜனா மின்னணு குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கைவிரல் ரேகையை சரிபாா்க்க வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அப்போதுமுதல், தமிழகத்தில் ரேஷன் அட்டைகளில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
நடைமுறை சிக்கல் : ஆனால், இது சில நடைமுறை சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது. காரணம், வெளியூர்களில் வசித்து வருபவர்கள், தினக்கூலி வேலைகளுக்கு செல்பவர்களால், ரேஷன் கடை நேரத்துக்கு சரியாக செல்ல முடிவதில்லை.. அப்படியே சென்றாலும், காத்திருந்து கைரேகை பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்..
அதனால்தான், கைரேகை பதிவிற்காக ரேஷன் கடைகளுக்கு வரும்படி யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றும், குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கு சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை ஊழியர்கள் முடிக்க வேண்டும் என்றும் சிலநாட்களுக்கு முன்பு, தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கருவிகள்: அதேசமயம், ரேஷன்தாரர்களுக்கு பொருட்களை சரியாக விநியோகிக்க வேண்டும் என்பதற்காகவே, 35,750 ரேஷன் கடைகளுக்கும், "பாயின்ட் ஆப் சேல்" எனப்படும், விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
காரணம், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை, சில ஊழியர்கள் வாங்கியது போல் கருவியில் பதிவு செய்து முறைகேடு நடக்கிறதாம். மேலும், பொருட்கள் வழங்கிய உடனேயே, கார்டுதாரர்களின் செல்போன் நம்பருக்கு அனுப்பப்படும் SMS மெசேஜ்ஜையும் பலர் கவனிப்பதில்லையாம்.
பிரிண்ட்டர்: அதனால்தான், கைரேகை பதிவு மட்டுமின்றி, ரசீதும் தரும், "பிரிண்ட்டர்" வசதியுடன் ஒருங்கிணைந்த புதிய கருவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.. ஓயாசிஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் இதற்கான பணிகள் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், வரும் ஜூன் மாதத்துக்குள் 35,750 கடைகளுக்கு கருவிகள் அனைத்தும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, 2,750 கடைகளுக்கு புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 1,000 கடைகளுக்கு வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறதாம். எப்படியும், விரைவில் பணிகள் அனைத்தும் முடிந்து, அனைத்து கடைகளிலும் இது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கும் போது, ரசீதை பார்த்து என்னென்ன வழங்கப்பட்டன என்பதை அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications