Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷனில் நிம்மதி.. தீபாவளி வருது, மழைக்காலம் வேற! குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி தந்த தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருபக்கம் பண்டிகை காலம், மறுபக்கம் மழைக்காலம் துவங்கிவிட்ட நிலையில், தமிழக அரசால் ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இப்படியொரு அறிவிப்பு அரசு தரப்பில் வந்திருப்பது, ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பண்டிகை காலம் துவங்கிவிட்ட நிலையில், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் இருப்புகள் தட்டுப்பாடின்றி இருந்துவருகின்றன. அதனால்தான், ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணியும் சில நாட்களுக்கு முன்பு நம்பிக்கையான தகவலை வெளியிட்டிருந்தார்.

ration card holders ration shops ration goods

மத்திய அரசு அனுமதி: 17,100 மெட்ரிக் டன் கோதுமையை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த மாதம் முதல் கூடுதல் கோதுமை நியாயவிலைக் கடைகளுக்கு வந்து சேர்ந்துவிடும் என்று கூறியிருந்தார். அதன்படியே, கோதுமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், ரேஷன் கடையில் சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடுகள் இல்லாதவாறு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுபோக பருவமழை துவங்கிவிட்டதால், இதை கருத்தில்கொண்டும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ராதாகிருஷ்ணன்: பழநியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு ஆகிவயற்றின் தரத்தை ஆய்வு செய்தார். பாமாயில் , சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்பையும் கேட்டறிந்தார்.

பின்னர் ரேஷன் கடைகளுக்கு தேவைக்கேற்ப பொருட்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் மழைக்காலம் துவங்கி விட்டதால் நியாய விலை கடைகளில் தட்டுப்பாடு இன்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கட்டிடங்கள்: பின்னர் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் பேசும்போது, "தமிழகத்தில், 37 ஆயிரம் ரேஷன் கடைகளில், 6000 கடைகளுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டித்தரப்பட்டுள்ளது.. இந்த எண்ணிக்கையானது, வருடத்துக்கு பத்தாயிரம் கடைகள் கட்டிக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் எந்த நியாய விலை கடையில் வேண்டுமானாலும் பொருட்களை பெற்று கொள்ளலாம்.. அதற்கேற்றவாறு, நியாய விலைக் கடைகளில் பொருட்கள் இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது... ஒரு சில நியாய விலைக் கடைகளில் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த நபர்கள் பொருட்களை வாங்க செல்லும்போது தடங்கல் இருப்பதாக கூறப்பட்டது. அதையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கனமழை: மழை காலம் தொடங்கிவிட்டதால் தாழ்வான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உள்ள பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது... வெள்ளம், கனமழை பெய்துள்ள இடங்களில் பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார் ராதாகிருஷ்ணன்.

இதனிடையே, புதிய ரேஷன் கார்டு குறித்த தகவல்களும் வெளியாகியிருக்கிறது.. புதிய அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்கள் https://www.tnpds.gov.in/ என்ற உணவு பொருட்கள் வழங்கல் துறையின் இணையதள பக்கத்திற்கு சென்று புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பிக்கலாம் என்றும், புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்ற காலத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் குடும்ப தலைவர், உறவினர்கள், இருப்பிட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+