முன்பதிவு ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! 6 மாதங்களுக்கு 3% தள்ளுபடி – RailOne லாபம்
சென்னை: இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவேதான், ரயில் பயணிகளுக்கு டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது... நாளை புது வருடம் பிறப்பிக்க உள்ள நிலையில், குட்நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது. ஆம், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை அதிகரிக்க இந்திய ரயில்வே இந்த புதிய சலுகையை அறிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயில், புறநகர் மின்சார ரயில்களில் டிக்கெட் எடுக்க, புகார் அளிக்க என அனைத்து சேவைகளுக்குமான RailOne செயலியை ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது..

பயணிகள் ரொக்கப் பணம் பயன்படுத்தாமல், மொபைல் செயலிகள் மூலம் டிக்கெட் வாங்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.. இதற்காகவே RailOne என்ற செயலியில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
RailOne செயலி - முன்பதிவு
இந்த புதிய சலுகையின்படி, RailOne செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் போது 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இந்த சலுகை 2026 ஜனவரி 14 முதல் ஜூலை 14 வரை, 6 மாதங்கள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த குறிப்பிட்ட காலத்தில் RailOne செயலியை பயன்படுத்தி டிக்கெட் வாங்கும் பயணிகள் இந்த சலுகையை பெற முடியும்.
இதற்கு முன்பு RailOne செயலியில் R-Wallet மூலம் பணம் செலுத்தினால் மட்டுமே 3 சதவீத கேஷ்பேக் கிடைத்து வந்தது. அந்த விதிமுறைதான் தற்போது மாற்றப்பட்டுள்ளது... இனிமேல் UPI, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற எந்த டிஜிட்டல் கட்டண முறையிலும் பணம் செலுத்தினால் 3 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
ரயில்வே அமைச்சகம்
இந்த முடிவை இந்திய ரயில்வே அமைச்சகம் டிசம்பர் 30ம் தேதி CRIS என்ற ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. RailOne செயலியில் இந்த புதிய சலுகையை கொண்டு வர தேவையான மென்பொருள் மாற்றங்களை உடனே செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறிய, 2026 மே மாதத்தில் CRIS ஒரு கருத்து அறிக்கையை ரயில்வே அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது... இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த சலுகையை தொடரலாமா, மேலும் மாற்றங்கள் செய்யலாமா என்பதைக் குறித்து முடிவு எடுக்கப்படும்.
முன்பதிவு டிக்கெட் - 3 சதவீத தள்ளுபடி
இந்த 3 சதவீத தள்ளுபடி RailOne செயலிக்கு மட்டுமே வழங்கப்படும். டிக்கெட் கவுண்டர்கள் அல்லது மற்ற ஆன்லைன் தளங்களில் இந்த சலுகை கிடையாது. இதனால் RailOne செயலியின் பயன்பாடு அதிகரிக்கும் என்று ரயில்வே நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
அதுமட்டுமல்ல, இந்த புதிய திட்டம் பயணிகளுக்கு டிக்கெட் வாங்குவதை எளிதாக்கும். ரொக்க பணம் வைத்துக் கொண்டு வர வேண்டிய அவசியமும் குறையும்... சிறிய தொகை என்றாலும், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இந்த தள்ளுபடி பயனுள்ளதாக இருக்கும். இது தினசரி ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறந்த உதவியாக இருக்கும் என்பதால், ரயில்வேயின் இந்த அதிரடியை பயணிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications