மீண்டும் சர்ப்ரைஸ்.. மேலும் 2 வந்தே பாரத்.. நவீன வசதியுடன் பெட்டிகள்.. சென்னை ஐசிஎப் ஹேப்பி நியூஸ்
சென்னை: வந்தே பாரத் ரயில்களுக்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் பயணிகளிடம் தொடர்ந்து ஏற்பட்டு வரும்நிலையில், மீண்டும் ஒரு மகிழ்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.. அந்தவகையில், மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்க, ஐ.சி.எப்., ஆலைக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருக்கிறது. இது பயணிகளுக்கு பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
உலக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் மிக முக்கியமான தொழிற்சாலையாக, நம்முடைய சென்னையின் ஐசிஎஃப் விளங்கி வருகிறது.. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், 75,000க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் இந்த ஐசிஎஃப்பில் தயாராகி வெளிவந்திருக்கின்றன.

வந்தே பாரத்: அதேபோல, வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்புகளும் இஐஎப்பில்தான் நடந்து கொண்டிருக்கின்றன.. 60க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், 3515 ரயில் பெட்டிகளை தயாரித்து முடிக்க இந்த வருடம் டார்கெட் வைக்கப்பட்டுள்ளது. இவைகளில் 658 வந்தே பாரத் ரயில் பெட்டிகளும், 1536 எல்எச்பி பெட்டிகளும் அடக்கமாகும்.
வந்தே பாரத் தவிர, சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள், வந்தே மெட்ரோ ரயில்கள், அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள், ஸ்லீப்பர் வந்தே பாரத், வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் என பல்வேறு ரயில்களின் போன்றவைகளும் ஐசிஎப்பில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது, ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலுக்கு பல கட்ட சோதனைகள் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
குட்நியூஸ்: இப்படிப்பட்ட சூழலில் மற்றொரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது.. மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்க, ஐசிஎப் ஆலைக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருக்கிறதாம். அதிநவீன வசதிகள் உடைய இந்த ரயில், சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இதுவரை, 70க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
இப்படி வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்புகளில் பெருமளவு வரவேற்பு அதிகரித்துள்ளதால்தான், கூடுதலாக வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே: எனவேதான், தெற்கு ரயில்வேயில் பயன்படுத்துவதற்காக, மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்திருப்பதாகவும், இந்த ரயில்களை தயாரித்து வழங்குமாறு, சென்னை ஐசிஎப் ஆலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, இந்த 2 வந்தே பாரத் ரயில்களும், தலா 20 பெட்டிகள் உடையதாக இருக்குமாம்.. இதுதவிர, வடக்கு ரயில்வேக்கு, 20 பெட்டிகள் உடைய இரண்டு ரயில்களை தயாரித்து வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறதாம். கூடுதலாக 2 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்க, ஐசிஎப் ஆலைக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை பயணிகளிடம் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications