வணிகவரித்துறை சூப்பர்.. லட்டு லட்டா சொல்றாரே அமைச்சர் மூர்த்தி.. வெறும் 5 மாதத்தில் ரூ.6,091 கோடி
சென்னை: தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் வணிக வரித்துறையின் வருவாய் குறித்தும், ஜிஎஸ்டி வசூல் குறித்தும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். ஈட்டப்பட்டுள்ள வருவாயின் விவரங்களையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அரசுக்கு வருவாயை ஈட்டித்தருவதில் மிக முக்கிய பங்கினை வணிகவரித்துறை வகித்து வருகிறது.. எனவேதான்., வரி விதிப்பில் எளிய நடைமுறை, நிர்வாக சீர்திருத்தங்களுடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை துறையில் மேம்படுத்துதல், அறிவியல் பூர்வமான பல தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மின்னாளுமைத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை செயல்படுத்தியும் வருகிறது.

வணிகர்கள்: அதேபோல, வணிகர்கள் பயன்பெறும் வகையில், சமாதான் திட்டம், குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, விளையாட்டு வீரர்களுக்கான உதவி, சிறு கடைகள் அமைத்திட நிதியுதவி, திருமண உதவி மற்றும் விபத்துக்கால உதவி என்று பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே, ஒவ்வொரு வருடமும், துறைரீதியாக ஈட்டப்படும் வருவாயை வணிக வரித்துறையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில், கடந்த வருடத்தைவிட இந்த வருடம், அதிக வருவாயை வணிகவரித்துறை ஈட்டி வருகிறது...
வருவாய்: இந்த நிதியாண்டை பொறுத்தவரையில், தமிழக வணிக வரித் துறைக்கான வருவாய் இலக்கு ரூ. 1.42 லட்சம் கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது... இந்த நிதியாண்டிலேயே ரூ. 4 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தி கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான வருவாய் தொகையை அமைச்சர் மூர்த்தி தற்போது வெளியிட்டிருக்கிறார்.. சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிக வரி வளாக கூட்ட அரங்கில், கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
பாராட்டு சான்றிதழ்: வணிக வரி ஆணையர் டி.ஜகந்நாதன், இணை ஆணையர் துர்காமூர்த்தி மற்றும் வணிக வரித் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்த இந்த கூட்டத்தில், வணிகவரி ஆய்வு குழு பிரிவில் சிறப்பாக பணியாற்றி அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தந்தமைக்காக கூடுதல் ஆணையர் எஸ்.ஞானக்குமார் மற்றும் குழுவினருக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பிறகு அமைச்சர் மூர்த்தி பேசும்போது,"வணிக வரித் துறையின் நடவடிக்கைகள், கண்காணிப்பு மற்றும் அலுவலர்களின் செயல்பாட்டால், வணிக வரித் துறையின் மொத்த வரி வருவாய் இந்த வருடத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை ரூ.55,807 கோடியாக உள்ளது. இது கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வசூலிக்கப்பட்ட ரூ.49,716 கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரூ.6,091 கோடி கூடுதலாகும்.
வசூல் தொகை: சரக்கு மற்றும் சேவை வரி வசூலை பொறுத்தவரையில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை ரூ.31,338 கோடியாக இருந்தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை வசூலிக்கப்பட்ட ரூ.26,767 கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வரி வருவாய் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது" என்றார் அமைச்சர் மூர்த்தி.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications