இங்க மட்டும் வண்டி ஓட்டாதீங்க! சென்னையில் வருகிறது "ஹாப்பி ஸ்ட்ரீட்".. மாநகராட்சியின் மாஸ் ஏற்பாடு!
சென்னை: ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி மக்களை பயணிக்க வைக்கும் முயற்சியாக சென்னையில் இன்று 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னயில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடங்களில் ஒன்று அண்ணா நகர். சென்னை நகரின் பிரதான இடமாக விளங்கும் இப்பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் முயற்சியாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை அண்ணா நகரில் இன்று 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி அந்த பகுதியில் பஸ், மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அதாவது ஸ்மார்ட் போன்களில் இல்லாத விளையாட்டுகளான பம்பரம் விடுதல், கோலிக்குண்டு அடித்தல் போன்ற ஜாலியான விளையாட்டுக்களும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

போக்குவரத்து தடை செய்யப்பட்ட இடங்கள்
இதனையொட்டி, அண்ணாநகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, 2-வது நிழற்சாலையில் புளுஸ்டார் சந்திப்பு முதல் 2-வது நிழற்சாலை, 3-வது பிரதான சாலை சந்திப்பு (நல்லி சில்க்ஸ்) வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. தொடர்ந்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டு சைக்கிளிங் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- உடல் செயல்பாடுகள் என சொல்லப்படும் பிஷிக்கல் ஆக்டிவிட்டிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த துவங்கப்பட்டுள்ள சிறந்த முயற்சி இதுவாகும். மக்கள் நடைப்பயிற்சி, சைக்கிளிங், ஜாக்கிங் போன்றவற்றில் மக்கள் ஈடுபடும் வகையில் சென்னை ஈ.சி.ஆர் மற்றும் பெசண்ட் நகர் ஆகிய பகுதிகளில் சில குறிப்பிட்ட இடங்களில் மோட்டார் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மகிழ்ச்சியுடன் நடைப்பயிற்சி, சைக்கிளிங், ஜாக்கிங் போன்றவற்றில் ஈடுபடலாம். மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

மிகுந்த உற்சாகம் அளித்தது
ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறுகையில், "இது ஒரு மகிழ்ச்சியான தருணம். காலையில் எப்போதும் இந்த சாலை மிகவும் பரபரப்பாக இருக்கும். கார், மோட்டார் சைக்கிள், பஸ் என எப்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் இரைச்சல், ஒலி மாசு அதிக அளவில் இருக்கும். தற்போது இவை இல்லாமல் அமைதியாக உள்ளது. மக்களின் உடல் இயக்க செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம் போன்றவையும் நடத்தப்படுகின்றன. ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளும், பேட்மிண்டன், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டது மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடியதாக இருந்தது" என்றனர்.

8 இடங்களில் நடத்தப்படும்
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த சுகநாதன் கூறுகையில், ''ஹேப்பி ஸ்ட்ரீட் என்பது ஜாலியாக தெருவில் விளையாடுவதே ஆகும். நாம் விரும்பிய விளையாட்டை தெருவில் விளையாடலாம். பேஸ்கட் பால், கிரிக்கெட், டென்னிஸ் என விரும்பிய விளையாட்டை விளையாட முடியும். பம்பரம், கோலிக்காய் என நமக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடலாம். மொத்தம் உள்ள 52 ஞாயிற்றுக்கிழமைகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் 5 வாரங்கள் இதே இடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மீதியுள்ள ஒவ்வொரு 5 வாரங்களுக்கு ஒரு இடம் என இதேபோல் மேலும் 8 இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக சென்னையில் உள்ள 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன" என்றார்.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications