பேரறிவாளன் ஜாமீன்: இப்பவாவது மத்திய அரசின் நிலைப்பாடு மாறணும்.. 6 பேருக்கும் பிணை தேவை: வன்னி அரசு
விசிகவின் வன்னி அரசு பேரறிவாளன் ஜாமீன் குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: 30 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின் பேரறிவாளனுக்கு பிணை கிடைத்திருக்கிறது.. ஒன்றிய அரசின் எதிர்ப்பை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்! இப்போதாவது ஒன்றிய அரசு தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நளினி உள்ளிட்ட மற்ற 6 பேருக்கும் பிணை வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்..
ராஜீவ் கொலை வழக்கில் கைதிகளான நளினி, முருகன் உட்பட 7 பேர் சிறையில் வாட தொடங்கிய காலத்தில் இருந்தே அவர்களுக்காக குரல் கொடுத்து வருவது விசிகவாகும்..
இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன்மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத காலத்தில் இருந்து, விசிக இந்த விவகாரத்தில் தன்னுடைய தீவிரத்தை அதிகப்படுத்தியது.

விசிக கேள்வி
அதிலும் அக்கட்சியின் பொதுச்செலயாளர் வன்னி அரசு இது தொடர்பாக அரசுக்கு எதிரான பல கேள்விகளை எழுப்பி கொண்டே வருகிறார்.. அதிமுக ஆட்சி காலத்திலேயே, "தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முன்கூட்டியே அந்த மூவரை விடுதலை செய்த இந்த அரசு, ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 அப்பாவி ஆயுள்சிறைவாசிகளை விடுவிக்காதது ஏன்?" என்று கேட்டு திகைக்க வைத்தார்.

வன்னி அரசு கேள்வி
அதுமட்டுமல்ல எப்போதெல்லாம் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், 7 பேர் விடுதலை குறித்து பேசுகிறோரோ அப்போதெல்லாம் அவருக்கு பதிலளித்து கொண்டிருப்பது வன்னி அரசுதான்... "பேரறிவாளன்,சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை வேண்டிதான் நிற்கிறோம்... ஹீரோவாக்க அல்ல!.. காங்கிரசும் இந்த கோரிக்கையில் சேர்ந்து ஒலிக்க வேண்டும். இது தான் தமிழ்நாட்டின் குரல். கால்நூற்றாண்டுக்கும் மேலான தண்டனை போதாதா? " என்று அவரிடம் கேள்வி எழுப்பியவரும் வன்னி அரசுதான்.

நளினி
அதுமட்டுமல்ல, "முப்பதாண்டுகளாக சிறையில் வாடுகிறார் சகோதரி நளினி. விடுதலைக் காற்றை சுவாசிக்க காத்திருக்கிறார். வெளிச்சக்கீற்றை காண எதிர்பார்த்திருக்கிறார். மாநில உரிமைகளை நிலைநாட்ட திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எழுவர் விடுதலை நடைமுறைப்படுத்த வேண்டும். இனியும் ஆளுநருக்காக காத்திருக்க வேண்டுமா?" என்றும் கேள்வி எழுப்பியவர்.

மகிழ்ச்சி
இப்போது 10 வருடம் கழித்து திமுக ஆட்சி அமைந்தபோதும், இதே விவகாரத்தை மீண்டும் கிளப்பியது விசிகதான்.. "திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொன்ன 7 பேர் விடுதலையை நடைமுறைப்படுத்த வேண்டும், இனியும் ஆளுநருக்காக காத்திருக்க வேண்டுமா?" என்று கூட்டணி கட்சி என்றம் பாராமல் கேள்வி எழுப்பியிருந்தார் வன்னி அரசு.. இப்போது இதற்கெல்லாம் ஒரு விடிவு கிடைத்துள்ளது.. பேரறிவாளனுக்கு ஜாமீனும் கிடைத்தாகி விட்டது.
Recommended Video

கோரிக்கை
இதுகுறித்து வன்னி அரசு ஒருட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், 30 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின் பேரறிவாளனுக்கு பிணை கிடைத்திருக்கிறது.. ஒன்றிய அரசின் எதிர்ப்பை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்! இப்போதாவது ஒன்றிய அரசு தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நளினி உள்ளிட்ட மற்ற 6 பேருக்கும் பிணை வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்..
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications