புழல் சிறை மெடிக்கல் சென்டரில் எதோ நடக்குது.. டார்ச்சர் பண்ணாங்க.. ஜாமீனில் வந்த அமர்பிரசாத் ஆவேசம்
சென்னை: 22 வருடங்களில் அரசியலில் என்ன கற்றுக்கொள்ள முடியுமோ அதை 22 நாளில் ஜெயிலில் கற்றுக்கொள்ள முடிந்தது. மிகக் கடுமையான தொல்லை கொடுத்தார்கள் என்று ஜாமினில் வெளியே வந்த பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஜாமீனில் வெளியே வந்த பிறகு அமர்பிரசாத் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதவது:- நான் ஒன்றும் ஊழல் செய்து ஜெயிலுக்கு போகவில்லை. மக்கள் காசை கொள்ளையடித்து ஜெயிலுக்கு போகவில்லை. மக்கள் திட்டங்களில் திருட்டுத்தனமாக நான் ஜெயிலுக்கு போகவில்லை. எனது கட்சிக்காக நான் ஜெயிலுக்கு போனேன். எங்கள் கொள்கைக்காக போனது எனக்கு பெருமை அளிக்கிறது.

என்னை 6 மாதங்களுக்கு வெளியில் விடக் கூடாது என பத்ம வியூகம் அமைத்தது திமுக. அதனை எங்கள் தலைவர் அண்ணாமலை முறியடித்துவிட்டார். 22 வருடங்களில் அரசியலில் என்ன கற்றுக்கொள்ள முடியுமோ அதை 22 நாளில் ஜெயிலில் கற்றுக்கொள்ள முடிந்தது. மிகக் கடுமையான தொல்லை கொடுத்தார்கள். 2026ல் பாஜக ஆட்சி அமைத்தே தீருவோம். முதல்வர் யார் என்பது உங்களுக்கே தெரியும். எனது குடும்பத்தினருக்கு அண்ணாமலை தைரியம் கொடுத்துள்ளார்.
22 நாட்கள் தினமும் எனது குடும்பத்தினரிடம் அண்ணாமலை பேசி, நான் இருக்கிறேன்.. பார்த்துக்கொள்கிறேன்.. என தைரியம் அளித்துள்ளார். இந்த மாதிரி தலைவர்தான் கட்சிக்கு தேவை.. இதுதான் தலைமை.. குள்ள நரிகளை கண்டு அஞ்சும் கூட்டம் கிடையாது பாஜகவின் சிங்கக் கூட்டம். நான் சிறையில் ஒரு 10 ஆயிரம் கொசுக்களுக்கு வாழ்க்கை கொடுத்திருப்பேன். தினமும் என் சிறைக்கு வரும் காவலர்கள் என்னிடம் என்ன சொல்வார்கள் என்றால், இந்த கஷ்டம் எல்லாம் உங்களுக்கு எதுக்கு சார்..
நான் என்ன சொல்ல வரேன் என்றால் உதயநிதி சாரை மட்டும் தத்தி என்று சொல்லாதீர்கள்.. முதல்வரை பற்றி ஏதும் பேசாதீங்க சார்.. இனிமேல் அண்ணாமலை கூட மட்டும் பாதயாத்திரையில் கலந்துகொள்ளாதீங்க சார் என்று சொல்லாமா எதுக்கு உங்களுக்கு, பேப்பரில் பாருங்க எப்படி போட்டுருக்கிறாங்க.. நாளைக்கு ரிட் வருகிறது. அல்மோஸ்ட் அனவுன்ஸ் பண்ணிட்டாங்க.. இனும் 2 கேசை காட்டி என்னை பயமுறுத்தினார்கள்.
பிரசாத் என்ற பெயரில் இருக்கிறதாம். பிரசாத்தின் பெயரில் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள்.. அது எல்லாம் என் பெயரில் வருமா? நான் எப்போதும் உண்மையை பேசுவேன். ஒருத்தர் ஸ்மார்ட் என்றா ஸ்மார்ட் என்று சொல்லப்போகிறேன். தத்தி என்றால் தத்தி என்று சொல்லப்போகிறேன். இதற்கு நான் என்ன பண்ண முடியும். இதற்கு இன்னும் 4 கேஸ் போட்டு உள்ள வைக்க போறீங்களா? அது உங்கள் திறமை. 22 நாள் பார்த்துவிட்டேன். பழகிடுச்சு..
இதை வைத்து எல்லாம் என்னை பயம் காட்ட முடியாது. என்னுடைய அரசியல் தீவிரமாக இருக்கும். உயிர் இருக்கும் வரை பாஜகவில் தான் இருப்பேன். 2026ம் ஆண்டு திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சி அமையும். புழல் சிறை மெடிக்கல் சென் டரில் எதோ நடக்குது.. தமிழ்நாடு புழல் சிறை 2 ல் உள்ள மெடிக்கல் சென் டரில் என்ன நடக்குது என்பது குறித்து உடனடியாக சிறை கண்காணிப்பாளர் வெள்ளை அறிக்கை கொடுப்பாரா...
அங்கே எதற்காக எப்போதுமே நான்கு போலீசார் நிற்கிறார்கள். அங்கே இருக்கும் டாக்டர் ரூமையே பாதியாக பிரித்து இருக்கிறார்களாம். யார் அந்த ரூமில் இருக்கிறார்கள். ஜீ பூம்பா மாதிரி எதுவும் பேய் உள்ளதா? என்ன நடக்குது உள்ளே..மக்கள் பணத்தை கொள்ளை அடித்த ஆளும் கட்சியினருக்கு அவ்ளோ வசதிகள் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
22 நாளில் எனக்கு மெடிக்கல் ஸ்பெஷலிட்டி ஏன் கொடுக்கவில்லை. மைக்கை ஆப் செய்துவிட்டு அமர்பிரசாத் ரெட்டி என்று 10 முறை வாசிக்கிறார்கள்.. 22 வருடங்களில் அரசியலில் என்ன கற்றுக்கொள்ள முடியுமோ அதை 22 நாளில் ஜெயிலில் கற்றுக்கொள்ள முடிந்தது. இன்றைக்கு என்னை பிளார்ட்பாமில் படுத்து தூங்க சொன்னால் கூட தூங்கிடுவேன். எந்த கொசுவுக்கும் பயமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்!












Click it and Unblock the Notifications