ரூ 4 கோடி கடன் வாங்கி மோசடி.. சென்னை தொழிலதிபர் மீது ஹர்பஜன் சிங் புகார்
சென்னை: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரூ 4 கோடி கடன் வாங்கிவிட்டு மோசடி செய்ததாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் புகார் கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமாவார். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ 4 கோடியை கடனாக தன்னிடம் வாங்கியதாக ஹர்பஜன் சிங் புகார் அளித்துள்ளார்.
சென்னை மாநகர காவல் துறையிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். தொழிலதிபர் மற்றும் சிலர் தன்னை ஏமாற்றியதாகவும் ஹர்பஜன் தனது புகாரில் தெரிவித்துள்ளார். அந்த தொழிலதிபர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஹர்பஜன் சிங்
தன்னிடம் மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத் தரும்படி ஹர்பஜன் சிங் சென்னை மாநகர காவல் துறையிடம் புகார் மனு அளித்திருந்தார். அந்த புகாரில் அவர் கூறுகையில் சென்னை உத்தண்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழிலதிபர் நண்பர்கள் மூலம் எனக்கு அறிமுகம் ஆனார்.

4 கோடி ரூபாய்
தொழிலை விரிவுப்படுத்துவதற்காக 2015-ஆம் ஆண்டு என்னிடம் 4 கோடி ரூபாய் பணத்தை வாங்கினார். அதன் பின்னர் என்னால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி 25 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.

பவுன்ஸ்
ஆனால் அந்த காசோலை பவுன்ஸ் ஆனது என புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து மகேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மகேஷிடம் கேட்ட போது சென்னைக்கு அருகில் தாளம்பூரில் உள்ள எனது அசையா சொத்துகளை பிணையாக வைத்து ஹர்பஜனிடம் பணம் பெற்றேன்.

நிலுவைத் தொகை
இதற்காக திருப்போரூரில் உள்ள சார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். ஹர்பஜன் சிங்கிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்திவிட்டேன் என தெரிவித்தார். இந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications