ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார், ராக்கெட் ராஜா வேட்பு மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி.. காரணம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் பணங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஹரி நாடார் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டு இருந்த ஹரி நாடார் 37,726 வாக்குகள் பெற்று 3வது இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே இருப்பதால் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. வேட்பாளர்கள் நாலாபுறமும் சுற்றி சுழன்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நேற்றோடு வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் முடிந்த நிலையில் இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடந்து வருகிறது.

Hari Nadar Rocket Raja Nomination Papers Rejected in Alangulam Constituency Here Is the Reason

ராக்கெட் ராஜா வேட்பு மனு நிராகரிப்பு

அந்த வகையில் கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளன. அதே சமயம் சில வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் ஹரி நாடார் மற்றும் ராக்கெட் ராஜா ஆகிய இருவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஹரி நாடாரும், ராக்கெட் ராஜாவும் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தனர். அப்போது பணங்காட்டு படை கட்சி சார்பில் ஹரி நாடார் களம் இறங்கி இருந்தார். ஆனால் அதற்கடுத்த சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஹரி நாடார் கடந்த 2024 ஆம் ஆண்டு சத்திரிய சான்றோர் படை என்ற கட்சியை ஆரம்பித்தார்.

ஹரி நாடார், ராக்கெட் ராஜா

தற்போது ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஹரி நாடார். இருந்த போதிலும் அவர் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவதற்காக சிறையில் இருந்தபடியே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹரி நாடார் சிறையில் இருந்து முகவர் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தது செல்லாது என தேர்தல் நடத்தும் அலுவர் தெரிவித்து நிராகரித்துள்ளார்.

ஹரி நாடார் தாக்கல் செய்த வேட்புமனுவில், ரூ. 26.76 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ. 12 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன என்று குறிப்பிட்டு இருந்தார். இதேபோல் ராக்கெட் ராஜா வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ராஜாவுக்கு முன்மொழிந்தவர்களில் ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் பிழையோடு இருந்ததால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

3-வது இடம் பிடித்தார்

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஹரி நாடார் மற்றும் ராக்கெட் ராஜா இணைந்து தேர்தலை சந்தித்தனர். இதில் பணங்காட்டுப்படை கட்சி சார்பில் கடந்த 2021 தமிழக சட்டசபை தேர்தலில் ஹரி நாடார் போட்டியிட்டார். அப்போது அவர் 37,726 வாக்குகள் பெற்று 3வது இடம் பிடித்தார். அந்த சட்டமன்றத் தேர்தலில் ஹரி நாடார் போட்டியிட்டபோது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஹெலிகாப்டர் பிரச்சாரம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்று இருந்தார்.

இந்த முறை மனோஜ் பாண்டியன் திமுக சார்பிலும், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கேஆர்பி பிரபாகரனும், விஜய்யின் தவெக சார்பில் விபின் சக்கரவர்த்தியும் களம் காண்கிறார்கள். நாடார் சமுதாய ஓட்டுகள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் ஹரிநாடார் மற்றும் ராக்கெட் ராஜா ஆகியோரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர்களது வாக்குகள் யாருக்கு சாதகமாக அமையும் யாருக்கு பாதகமாக அமையும் என்பது வரும் மே 5 ஆம் தேதி தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+