Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவர் என்னோட கணவர்.. 2 பெண்கள்.. ஹரி நாடாருக்காக மாறி மாறி மோதிக்கொள்ளும் ஷாலினி - மலேசியா மஞ்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விஜயலட்சுமியை மிரட்டிய வழக்கில் சிறையில் இருக்கும் ஹரி நாடருக்காக இரண்டு பெண்கள் அடித்துக்கொள்ளும் சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பனங்காட்டுப் படை கட்சி தலைவராக இருந்த ஹரி நாடார் தற்போது அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அடுத்தடுத்து இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக பனங்காட்டுப் படை ராக்கெட் ராஜா அறிவித்துள்ளார்.

முதல் வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு பெங்களூரில் அடைக்கப்பட்டார். பெங்களூரில் இருக்கும் வெங்கட்ராமன் என்பவரிடம் இவர் ரூ. 7.2 கோடி ரூபாய் வாங்கி இவர் மோசடி செய்து இருக்கிறார்.

மோசடி வழக்கு

மோசடி வழக்கு

அவருக்கு கடன் வாங்கி தருவதாக கூறி ஹரி நாடார் கடைசியில் கடன் வாங்கி தராமல் கமிஷன் மட்டும் பெற்று ஏமாற்றி உள்ளார். இதையடுத்து பெங்களூர் போலீசில் வெங்கட்ராமன் புகார் அளித்தார். இந்த வழக்கில்தான் கர்நாடக போலீசார் ஹரி நாடாரை கைது செய்தனர். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஹரி நாடார் தற்போது பரப்பன அக்ரஹார சிறையில் காலம் கழித்து வருகிறார். கைது செய்யப்பட்ட போது ஹரி நாடார் மஞ்சு என்ற பெண்ணுடன் கேரளாவில் வசித்து வந்தார்.

இன்னொரு வழக்கு

இன்னொரு வழக்கு

தற்போது பெங்களூர் சிறையில் உள்ள ஹரிநாடாரை நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் திருவான்மியூர் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி குறிப்பிட்டு இருந்தார். அந்த அரசியல் வாதிக்கு ஆதரவாக செயல்படும் வகையில் விஜயலட்சுமியை ஹரி நாடார் மிரட்டியதாக புகார் வைக்கப்பட்டது. இந்த மிரட்டலை தொடர்ந்து விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றார். இந்த வழக்கில்தான் ஹரி நாடார் தற்போது கைதாகி பெங்களூர் சிறையில் இருந்து சைதாப்பேட்டை சிறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

மனைவி

மனைவி

இந்த நிலையில் ஹரி நாடார் முதல் மனைவி ஷாலினி நெல்லை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். கேரளாவில் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்த போது ஹரிநாடாரை சந்தித்தாக குறிப்பிடும் ஷாலினி அவரை 2011ல் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் ஹரி நாடார் தன்னை ஏமாற்றிவிட்டு இப்போது மலேசியாவை சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணுடன் கேரளாவில் வசித்து வருவதாக தனது புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஷாலினி ஹரி நாடார்

ஷாலினி ஹரி நாடார்

ஹரி நாடார்தான் என் கணவர்.. சட்டப்படி நாங்கள் இன்னும் விவாகரத்து வாங்கவில்லை. நான் விவாகரத்து கொடுக்க மாட்டேன். என்னை மஞ்சு போன் செய்து மிரட்டுகிறார். மஞ்சு ஹரி நாடாரின் மனைவி கிடையாது. ஆனால் பெங்களூர் போலீசார் மஞ்சுவை ஹரிநாடாரின் மனைவி என்று ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹரி நாடாரின் மனைவி ஷாலினி தெரிவித்துள்ளார்.

மஞ்சு

மஞ்சு

ஆனால் மஞ்சுவும் ஹரிநாடார்தான் என் கணவர்.. நாங்கள் சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் ஷாலினி, சட்டப்படி நான்தான் ஹரி நாடாரின் மனைவி என்று போலீசில் மனு அளித்துள்ளார். நேற்று நெல்லை கமிஷ்னர் அலுவலகத்தில் ஷாலினி மனுவை அளித்து, மஞ்சு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சைதாப்பேட்டை சிறையில் ஹரி நாடாரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஷாலினி கோரிக்கை விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+