மிக்ஜாம் புயல்.. வளசரவாக்கத்தை வழிச்சி எடுத்த மழை.. ஹாரிஸ் ஜெயராஜுக்கு பல கோடி நஷ்டம்
சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலின் கோர தாண்டவத்தால் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல், சென்னையை புரட்டி எடுத்துவிட்டது. மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பொருட் சேதத்தையும் உயிரிழப்புகளையும் தந்துவிட்டது. மழை, வெள்ளம் என்பது இயற்கையான ஒன்று என்றாலும் அது தாழ்வான பகுதிகளில் தேங்கி பல ஏழை மக்களை வதைத்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மழை வெள்ளத்தால் எத்தனையோ ஏழை மக்களின் அத்தியாவசிய பொருட்களான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, தட்டுமுட்டு சாமான்கள், மளிகை சாமான்கள் என பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது.
ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருள் இழப்பீட்டிலிருந்து மெல்ல மெல்ல தலைத்தூக்கி வரும் நிலையில் இப்படிப்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் பல இடங்களில் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை அளித்து வந்தவர்களையும் இந்த பெருவெள்ளம் விழுங்கிவிட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து எப்போதுதான் மக்கள் மீண்டு வர போகிறார்கள் என தெரியவில்லை.
இந்த பெருவெள்ளத்தால் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பியும் உடைந்தும் நீர் ஊருக்குள் புகுந்துவிட்டது. இதனால் மக்கள் ஆசை ஆசையாக பார்த்து பார்த்து வாங்கிய கார்கள் எல்லாம் வெள்ளநீரில் மூழ்கிவிட்டன. இவற்றிற்கு இன்சூரன்ஸ் மூலம் சரி செய்தாலும் பலனை அளிக்குமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். அது போல் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் தங்கள் குழந்தைகளுக்கு பால் வாங்கிக் கொடுக்க முடியாத அளவுக்கு இந்த வெள்ளம் புரட்டி போட்டது.
பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த மழையால் சாமானியர்களுடன் சேர்ந்து பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தை வெள்ளம் சூழ்ந்தது. அது போல் அங்குள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டையும் வெள்ளம் சூழ்ந்துவிட்டது.
நடிகர் மன்சூர் அலிகான் வீட்டை வெள்ளம் சூழ்ந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மீன்கள் வருவதாகவும் தெரிவித்திருந்தார். நடிகர் விஷாலின் அண்ணாநகர் வீட்டை சுற்றியும் வெள்ளம் சூழ்ந்தது. இப்படி பல நடிகர், நடிகைகளின் வீடுகளும் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஹாரிஸுக்கு சொந்தமாக வளசரவாக்கத்தில் வீடு உள்ளது. அங்கு அன்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்கில் தனது சொகுசு கார்களை நிறுத்தி வைத்துள்ளார். அந்த இடம் முழுக்க வெள்ள நீர் சூழ்ந்துவிட்டது. வளசரவாக்கத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி 20 செ.மீ.ருக்கு மேல் மழை பெய்தது. இந்த நிலையில் ஹாரிஸின் ஸ்டூடியோவிலும் மழை நீர் புகுந்துவிட்டது. இதனால் அவருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications