"பூஜை அறையில்" கே.டி.ராகவன்.. விடிகாலையில் வந்த வீடியோ.. வெலவெலத்த பாஜக "கமலாலயம்".. என்னதான் ஆச்சு?
கேடி ராகவன் குறித்த வீடியோ வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் முடிவடைகிறது
சென்னை: பாஜகவின் மூத்த தலைவர் கே.டி. ராகவன் மீதான புகார்கள், விசாரணைகள், சர்ச்சைகள் என்ன ஆனது என்ற கேள்வி இன்றைய தினம் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது.
தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன்.. டிவி விவாதங்கள் என்றாலே, அதில் ராகவன் இருக்கிறாரா? என்று ஆர்வத்துடன் தேடிப்பார்க்கும் அளவுக்கு, தன்னுடைய வாதங்களினால் நன்கு அறியப்பட்டவர்.
நீண்ட காலமாகவே கட்சியில் இருந்து வந்தவர்.. தமிழக பாஜகவின் மாநில தலைவருக்கான தேர்வு நடக்கும்போதெல்லாம் ராகவன் பெயரும் வந்துவிட்டு போகும்.. ஆனாலும், அவருக்கான தலைமை பதவி கடைசிவரை கிடைக்கவில்லை.
அதேசமயம், டெல்லி மேலிடத்துக்கு ஸ்ரைட்டாக போனை போட்டும் பேசும் அளவுக்கு கட்சியில் செல்வாக்கு பெற்றவர்.. இந்நிலையில்தான், திடீரென அன்று விடிகாலை, அந்த வீடியோ வெளியானது.. பூஜை அறையில், அரை நிர்வாண கோலத்தில், பெண் ஒருவருடன் வீடியோகாலில் ஆபாச செய்கையுடன் வெளியான காட்சி, இணையத்தில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.. அதிலும் கமலாலயம் சற்று நடுங்கித்தான் போனது.. யூடியூபர் மதன் இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து, கே.டி.ராகவன் ஒரு விளக்கம் தந்தார்.. "தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யாரென்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்தவிதப் பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். என்னைப் பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்துவதற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது... என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன், சட்டப்படி சந்திப்பேன், தர்மம் வெல்லும்" என்று பதிவிட்டார்.
இதற்கு நடுவில் மாநில தலைவர் அண்ணாமலைக்கும், யூடியூபர் மதனுக்கும் சில கருத்து வேறுபாடுகள் வெடித்தன.. அந்த வீடியோ எப்படி வெளியானது, என்பது குறித்து இரு தரப்பிலுமே காரணங்களும், விளக்கங்களும் சொல்லப்பட்டன.. இறுதியில், குற்றம் சுமத்தப்பட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த மாநில செயலாளர் மலர்கொடி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைத்து வீடியோ பதிவில் உள்ள உண்மைத்தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணாமலை அறிவித்திருந்தார்..
இதனிடையே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி எண்ட்ரி ஆனார்.. கே.டி.ராகவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று டிஜிபி சைலேந்திரபாபுவுக்கே புகார் கடிதமும் அனுப்பினார்.. ஒருபக்கம் மலர்க்கொடியின் விசாரணை மறுபக்கம், ஜோதிமணி புகார்கள் உட்பட தமிழகமே பரபரத்து காணப்பட்டது.. அதற்கு பிறகு இவை எல்லாம் என்ன ஆனது????

பாயிண்ட் + 1
முதலாவதாக, இந்த வீடியோவின் பின்னணி குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அப்போது சோஷியல் மீடியாவில் வட்டமடித்தன.. அதாவது, பாஜவில் உள்ள முக்கிய தலைவர்கள் பெண்கள் விஷயத்தில் ரொம்ப மோசம்... கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் நிர்வாகிகள், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.. அக்கட்சியின் தலைவர்கள் மீது தொடர் பாலியல் தொல்லை புகார்கள் வந்தபோதும்கூட, அந்த புகார்களை விசாரிக்க தலைமை மறுத்து விட்டது.. சிலர் மிரட்டப்பட்டனர். இதனால், பயந்து போய் பல பெண்கள் புகார் அளிக்கவில்லை என்றும், ஒரு சிலர் தைரியமாக புகார் தந்த நிலையில், அந்த பெண் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் என்றும் தகவல்கள் பரபரத்தன.

பாயிண்ட் + 2
இரண்டாவதாக, ராகவனுக்கு குறி வைக்கப்பட்டதற்கு இன்னொரு காரணம் உள்ளதாக சலசலக்கப்பட்டது.. பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆர்எஸ்எஸ்ஸில் சில தலைவர்களிடம் தனக்கு நெருக்கத்தை பயன்படுத்தி கட்சியில் உள்ள பெண்களிடம் கைவரிசை காட்டி வந்ததுடன், மாநில பொதுச்செயலாளராக இருந்தாலும், கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் ராகவன் வைத்திருந்ததாலும், இவர் மீது டெல்லியில் புகாரளிக்க மாநில நிர்வாகிகளே சற்று தயங்கினர். பெண்கள் மற்றும் கட்சியினர் கே.டி.ராகவன் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். கட்சியில் உள்ள பெண்களிடம் எப்போது பேசினாலும், வீடியோ காலில் வர சொல்லி ராகவன் டார்ச்சர் செய்வதாலேயே இவரை சிக்க வைக்க கட்சிக்குள்ளேயே வலை பின்னப்பட்டதாக அடுத்த தகவல் பரவியது.

பாயிண்ட் + 3
மூன்றாவதாக, மேலிடத்தில் உள்ள தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி கட்சியில் முக்கிய முடிவுகளை எடுப்பது, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் மாநில தலைவருக்கு, ராகவன் முட்டுக்கட்டையாக இருந்ததாகவும், பொன்.ராதா தொடங்கி தமிழிசை, முருகன், அண்ணாமலை வரை மாநில தலைவர்களை ராகவன் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததாலேயே ராகவன் குறி வைக்கப்பட்டார் என்றும் அடுத்த தகவல் பரவியது.

பாயிண்ட் + 4
நான்காவதாக, ராகவனின் ஆபாச வீடியோ வெளியிட்டு பேசிய மதன், லிஸ்ட் கையில் உள்ளது.. 15 மாநில தலைவர்கள் சிக்க போகிறார்கள் என்று மதன் மிரட்டல் விடுத்த நிலையில், இந்த விஷயத்தில் பாஜக தலைமை வாய்மூடி மவுனியாகவே இருக்கிறதே ஏன்? ஆபாச வீடியோவை, திருட்டுத்தனமாக பதிவு செய்து வந்து கொடுத்த மதனால், தான் பேசுவதையும் எப்படி ரிக்கார்டு செய்யாமல் இருப்பார் என்று ஒரு ஐபிஎஸ் படித்தவருக்கு எப்படி தோணாமல் போனது என்பது ஆச்சரியமாக மட்டுமல்ல, அதிர்ச்சியாகவும் இருந்தது.. ஐபிஎஸ் அதிகாரியை, அதுவும் ஒரு கட்சியின் மாநில தலைவர் பேசிய ஆடியோவை ஒரு சாதாரண நபர் ரிலீஸ் செய்யும் அளவுக்கு, அண்ணாமலை அசால்ட்டாக நடந்து கொண்டதும் வியப்பாக உள்ளதாக, இன்னொரு தகவல் பரவியது.

பாயிண்ட் + 5
ஐந்தாவதாக, சில மாதங்களுக்கு முன்பு, செய்தியாளர்கள் மாநில தலைவர் அண்ணாமலையிடம், பாஜக நிர்வாகியாக இருந்த ராகவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு அவர், "பாலியல் விவகாரம் தொடர்பாக பாஜ சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டியிடம் இது வரை யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் அளிக்கும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி கூறியிருந்தார் அண்ணாமலை.

ராகவனை காணோமே
இப்படி ஏராளமான யூகங்களும், வதந்திகளும், தகவல்களும் இணையத்தில் றெக்கை கட்டி பறந்த நிலையில், திடீரென அவைகளை பற்றி தகவல்கள் எதுவும் தெரியவில்லை.. "குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன், சட்டப்படி சந்திப்பேன், தர்மம் வெல்லும்" என்று சொல்லிவிட்டு போன ராகவனை இன்னும் காணவில்லை.. புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அதுகுறித்த நடவடிக்கை என்ன ஆனது? புகார் தர யாரும் முன்வரவில்லையா? என்பது தெரியவில்லை.. மலர்க்கொடி விசாரணை என்ன ஆனது? நடந்த சம்பவம் அனைத்துமே பொய்யா? என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை.. எனினும், சமீபகாலமாகவே பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது..

பாபா + மணிகண்டன்
அப்படித்தான் மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.. சிவசங்கர் பாபா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.. பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.. அந்த வகையில், கேடி ராகவன் மீதான சந்தேகத்திற்கு இடமின்றி புகார் உறுதியாகும் பட்சத்தில், நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து எழுந்து, ஓய்ந்தே விட்டது.. இந்நிலையில், நடந்த நிகழ்வுகளை எல்லாம் மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்தி கொண்டு வருகிறார்கள் இணையவாசிகள்.. காரணம், ராகவன் வீடியோ வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் முடிந்துவிட்டது..!
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications