சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினையே பார்த்துவிட்டாரே! ஆபரேஷனை தொடங்கிய பாஜக! பீகாரிலும் ஆரம்பித்த அசைன்மென்ட்! 2 பேர் யார்?

Google Oneindia Tamil News

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு இப்போதே பாஜக வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.கடந்த முறை பாஜக கூட்டணி சார்பாக முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனார்

ஆனால் இந்த முறை பாஜக கூட்டணியிடம் பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லை.

என்ன அண்ணாமலை இதெல்லாம்? கேரள பாஜக தலைவர் மகன் திருமணத்தில் பங்கேற்ற லுலு உரிமையாளர் என்ன அண்ணாமலை இதெல்லாம்? கேரள பாஜக தலைவர் மகன் திருமணத்தில் பங்கேற்ற லுலு உரிமையாளர்

பாஜக வாக்கு

பாஜக வாக்கு

பாஜகவிடம் 48.8 சதவிகித பலம் மட்டுமே உள்ளது. குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய 51 சதவிகித வாக்குகள் தேவை. இந்த நிலையில் பாஜக தற்போது மாநில ஆளும் கட்சிகளின் தயவை நம்பி இருக்கிறது. அதிக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கொண்டு இருக்கும் மாநில கட்சிகளின் ஆதரவை பாஜக எதிர்பார்த்து உள்ளது. தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சி திமுகதான். இதனால் திமுகவின் ஆதரவையும் பாஜக எதிர்பார்த்து உள்ளது.

என்ன செய்தார்?

என்ன செய்தார்?

இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினை சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சந்தித்தார். ஸ்டாலினை நேரில் சந்தித்த அவர் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார். இதில் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றியும் ஸ்டாலின் - வெங்கையா நாயுடு பேசியதாக கூறப்படுகிறது. அதோடு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3ந் தேதி அரசு விழாவாக இந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதிக்கு சிலை திறக்கப்பட உள்ளது.

சிலை திறப்பு

சிலை திறப்பு

கருணாநிதிக்கு 16 அடி உயர வெண்கல சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார். வெங்கையா நாயுடுவை குடியரசுத் தலைவராக பாஜக முன்னிறுத்தலாம் என்று கூறப்படுகிறது. தென்னிந்திய தலைவர் என்பதால் ஆந்திரா, தெலுங்கானாவில் ஆளும் கட்சிகள் இவருக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டு வருகின்றன. அதை முன்னிட்டே இவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

சந்திப்பு

சந்திப்பு

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு நபரையும் பாஜக இதற்காக லிஸ்டில் வைத்து இருக்கிறதாம். பீகாரில் இதே விவகாரம் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வடமாநிலங்களில் இருக்கும் பாஜக கூட்டணி அல்லாத தலைவர்களும் ஏற்கும் வகையில் வடமாநிலத்தில் இருந்து ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்று பாஜகவில் சிலர் கோரிக்கை விடுகிறார்களாம். வெங்கையா நாயுடு தேசிய அளவில் தெரிந்தவர் என்றாலும், வடமாநிலங்களில் இன்னும் பிரபலமாக இருக்கும் பிறப்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தலைவரை அல்லது பெண்ணை தேர்வு செய்தால் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளும் கூட அந்த வேட்பாளரை ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளன.

 பாஜக பிளான்

பாஜக பிளான்

இதனால் அப்படி ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பாஜக யோசித்து வருகிறதாம். இதை முன்னிட்டே மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் நேற்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து உள்ளார். இவர்கள் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை செய்துள்ளனர். அப்போது ஜனாதிபதி தேர்தல் பற்றி இவர்கள் பேசி உள்ளனர். வடஇந்தியாவில் பிரபலமாக இருக்கும் தலித் பெண் தலைவர் ஒருவரை முன்னிறுத்தலாமா. அப்படி செய்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆதரவு தருமா என்று ஆலோசனை செய்து இருக்கிறார்களாம்.

English summary
Has BJP already started their planning for the India presidential election? குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு இப்போதே பாஜக வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X