ஆஹா கமல் முடிவே எடுத்துட்டாராமே? "இவங்களோடுதான்" மநீம கூட்டணி? குஷியில் திமுக.. மிரண்டு போன பாஜக?
சென்னை: தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாக தெரிய தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் கொள்கையுடன் கட்சியை தொடங்கியவர் கமல்ஹாசன். தமிழ்நாட்டில் திராவிடம், தலித்தியம், கம்யூனிசம், வலதுசாரி, இடதுசாரி என்ற தத்துவங்கள் இருக்கின்றன.
இந்த தத்துவங்கள் எல்லாம் ஒன்று வலது என்ற முனையில் இருக்கும்.. அல்லது இடது என்ற முன்னிலையில் நிற்கும். இந்த நிலையில்தான் கமல்ஹாசன் புதிதாக மய்யம் என்ற தத்துவத்தை கொண்டு வந்தார். பல்வேறு நாடுகளில் இருக்கும் மய்ய - centrist அரசியல் கொள்கையை தமிழ்நாட்டிற்கும் இறக்குமதி செய்தார் கமல்ஹாசன்.

தேர்தல்
கடந்த சட்டசபை தேர்தலிலும் கூட மக்கள் நீதி மய்யம் பிரதான கட்சிகளுடன் இணையாமல் தனியாக போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கு பின் திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் கமல்ஹாசன் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறார். முக்கியமாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக கமல்ஹாசன் பழகி வருகிறார். விக்ரம் படத்தை வெளியிட்டது, அதன்பின் கமலின் பல படங்களுடன் ஒப்பந்தம் செய்தது, இந்தியன் 2 படத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பிற்குள் வந்தது என்று உதயநிதி - கமல் நெருக்கமாகி உள்ளனர்.

என்ன பேசினார்?
இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடனும் கமல்ஹாசன் நெருக்கமாகி விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்பார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். என் அப்பா ஒரு காங்கிரஸ் நிர்வாகி. எனக்கு பல்வேறு அரசியல் கொள்கைகள் இருந்துள்ளன. நான் தனியாக கட்சி நடத்தி வருகிறேன். ஆனால் என்னுடைய நாடு என்று வரும் போது, கட்சி கோடுகள், எல்லைகள் எல்லாம் மறைந்துவிடும். நான் அந்த வேறுபாடுகளை மறந்துவிட்டு இங்கே வந்து இருக்கிறேன், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைய உள்ளதோ என்ற கேள்வி எழுந்தது.

கூட்டணி
அதன்பின் ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். இவர்கள் இருவரும் மேற்கொண்ட ஆலோசனையில் பாஜகவிற்கு எதிரான கடுமையான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. தமிழ்நாட்டின் அன்பு, கொலை, பரிவு போன்ற விஷயங்களும் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில்தான் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. கட்சி தலைவர் கமல் தலைமையில், இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டதற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கமலஹாசனை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தேச நலன்தான் முக்கியம். தேச நலனுக்காக கட்சியின் எல்லைகளை மீறி செயல்படலாம். தேச நலனுக்காக கட்சியின் எல்லைகளை தாண்டி கமல்ஹாசன் முடிவு எடுக்கலாம். அதுவே இப்போது தேவை என்று கூறப்பட்டது. அதாவது மய்யம் என்ற கொள்கை எல்லையை தாண்டி வலது அல்லது இடதுசாரியுடன் இணையலாம் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள் . இதனால் கமல் ஹாசன் கண்டிப்பாக காங்கிரசுடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. உதயநிதியுடனும் கமல் நெருக்கமாக இருப்பதால் திமுக - காங்கிரஸ் - மநீம கூட்டணியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கமல்ஹாசன் அரசியல் ஆலோசகர் ஒருவருடன் நெருக்கமாக இருந்து வருகிறார். அந்த ஆலோசகர்தான் மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நேரத்தில் கட்சியை உருவாக்குவதில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. அதே நிர்வாகி திமுகவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். அந்த ஆலோசகரின் அறிவுறுத்தலின் பெயரில் திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கோவை
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திமுக + காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் கமலுக்கு மாநில அரசியலில் பெரிதாக ரோல் இருக்காது. அது திமுக + கமல் இடையே ஒரு வித conflict of intrest ஐ ஏற்படுத்தும் என்பதால் கமல்ஹாசன் பெரும்பாலும் தேசிய அரசியல் மீது கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக கோவையில் இவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நூலிழையில்தான் கமல் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். அப்போது அவர் கூட்டணியில் இல்லை.

வாய்ப்பு
இப்போது காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டால், செந்தில் பாலாஜியின் அசுர உழைப்பையும் சேர்த்து கமல்ஹாசன் வெற்றிபெற வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் கோவை லோக்சபா தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கோவையை விட்டுக்கொடுக்க திமுக விரும்பவில்லை என்றால் சென்னையில் ஏதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியில்.. பெரும்பாலும் தென் சென்னையில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி அமையும் பட்சத்தில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு அது பெரிய பின்னடைவாக இருக்கும். இப்போதே பாஜக நிர்வாகிகள் பலர் கமலை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications