"லாக்" போட்ட சீமான்.. "தம்பி அண்ணாமலை, நேர்மையானவராக இருந்தால்".. கதிகலங்கிய அதிமுக.. விழிக்கும் பாஜக
சென்னை: திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக வெளியிட்டுள்ள நிலையில், அதுகுறித்து நாம் தமிழர் கட்சி சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.. அத்துடன், அதிமுக + பாஜக இரு கட்சிகள் குறித்தும் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.
சீமானை பொறுத்தவரை, தீவிரமான காங்கிரஸ் எதிர்ப்பாளர் ஆவார்.. பாஜகவை எந்த அளவுக்கு விமர்சிக்கிறாரோ, அதே அளவுக்கு காங்கிரஸையும் விமர்சிப்பவர்.. பாஜகவை போலவே, காங்கிரஸையும் பொதுவான அரசியல் எதிரியாக கருதி வருகிறது நாம் தமிழர் கட்சி..

"பாஜக - காங்கிரஸ் இவங்க 2 பேரும் ஒன்றுதான்" என்று அடிக்கடி சொல்லி வருபவர் சீமான்.. "இரண்டு கட்சிகள் இடையே கொள்கை ஒன்றுதான்.. ஆனால் கட்சிகள் மட்டுமே வேறு.. பணமதிப்பிழப்பீடு தவிர்த்து சிஏஏ, என்ஆர்சி, என்ஐஏ, ஜிஎஸ்டி, நீட் தேர்வு இவைகளை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் அவற்றை செயல்படுத்தியது பாஜக. 2 பேருமே பேராபத்தை நோக்கி நாட்டை நடத்துபவர்கள்" என்று மேடைக்கு மேடை சீமான் முழங்கி வருபவர்.
அப்படிப்பட்ட சீமான், ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரத்தில் ஓடோடி வந்து கருத்து கூறியிருந்ததுடன், ராகுலுக்கு ஆதரவும் தந்திருந்தார்.. "ஒருவர் பிரதமரானால் அவரை விமர்சிக்கவே கூடாதா? அரசை விமர்சனம் செய்வது குற்றமில்லை என்று கோர்ட்டே கூறியிருக்கிறது.. அப்படியிருக்கும்போது, சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஏன் தண்டனை தந்துள்ளது? அதை படிக்கும்போது சிரிப்பு தான் வருகிறது" என்று கூறியிருந்தார் சீமான்.
மாற்று அணி: இதனிடையே, பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்க வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையை சீமான் வலியுறுத்த துவங்கியிருக்கிறார்.. அப்படி ஒரு மாற்று அணி உருவானால், அந்த அணியுடன் கூட்டணி குறித்து அப்போது யோசிப்போம் என்றும் சீமான் கூறியிருந்தார்.. ஆனால், அது எந்த கூட்டணி என்று தெரியவில்லை.. பாஜகவுக்கு எதிரான அணி என்றால், அது நிச்சயம் காங்கிரஸ் அல்லாத அணியாக இருக்காது.. இன்னும் சொல்லப்போனால், பாஜகவை தேசிய அளவில் தயாராகி கொண்டிருப்பதும் திமுகதான் என்பதால், சீமான் சொல்லும் கூட்டணி மிகப்பெரிய சஸ்பென்ஸை உருவாக்கி கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான், திமுக மீதான ஊழல் புகார்களை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து சீமான் கருத்து சொல்லி உள்ளார்.. அப்போது, பாஜகவை சீண்டியதுடன், அதிமுகவையும் சேர்த்து சீண்டி உள்ளது முக்கியமாக பார்க்கப்பட்டு வருகிறது..
திமுக ஊழல்: சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த பட்டியலை வரவேற்கிறேன்.. ஆனால், இந்த புகார்கள் புதிது இல்லை.. எனக்கு தெரியும்.. என் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியும்.. கேள்வி கேட்கிற உங்களுக்கும் தெரியும்.. இந்த நாட்டில் வாழும் எல்லாருக்கும் தெரியும்.. அவங்களுக்கு எவ்ளோ சொத்து இருக்கிறது? எப்படி அதை சம்பாதித்தார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.. இது புதிய தகவல் ஒன்னுமே இல்லை.. ஆனால், அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க?

திமுக பற்றி பட்டியல் வெளியிட்டதால், அதிமுகவில் உள்ளவர்கள் புனிதர்கள் ஆகிவிட முடியுமா? அதனால் அதையும் வெளியிட வேண்டும்.. இரண்டு பக்கமும் நடவடிக்கை எடுக்கணும்.. அப்படியானால், ஊழல் செய்த கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என்கிற பேரறிவிப்பையும் செய்ய வேண்டும்.. அன்புதம்பி அண்ணாமலைக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நடவடிக்கை எடுங்க, நீங்க இப்போ சொன்னது எல்லாம், எங்களுக்கும் தெரியும்.. டிவியில் செய்தி வாசிப்பது போல என்ன இதெல்லாம்?
ஓபன் அட்டாக்: எல்லாம்தான் எங்களுக்கும் தெரியுமே.. அதனால் நடவடிக்கை எடுக்கணும்.. அதேமாதிரி போன ஆட்சியில் இருந்தவர்கள் எவ்வளவு சொத்து சேர்த்திருக்காங்க? ஊழல் செய்திருக்காங்க? அதையும் வெளியிடுங்க.. அப்பதான் நடுநிலைமையாக இருக்கும்.. அங்கே கூட்டணி வைத்து கொண்டிருப்பதால், வாய்மூடிட்டு அமைதியாக இருக்க கூடாது.. அப்படி நீங்கள் அமைதியாக இருந்தால், ஊழல் செய்தி கட்சியுடன் ஏன் கூட்டணி வைக்கிறீர்கள் என்று நாங்கள் கேள்வியை கேட்போம்.. நீங்க நேர்மையானவர்களாக இருந்தால், அதிமுக மாஜி அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை தயவுசெய்து வெளியிடுங்க.. ஊழல்களை வெளியிடுங்க.. நடவடிக்கையும் எடுங்க" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications