கிழிந்த நோட்டுகளை வங்கியில் மாற்ற முடியுமா? ரிசர்வ் வங்கியின் முக்கிய விதிகள் வெளியீடு
சென்னை: நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் தவறுதலாகக் கிழிந்துவிட்டாலோ அல்லது நனைந்து சிதைந்து போனாலோ, அதனைப் பயன்படுத்த முடியாது என்று பலரும் கவலைப்படுவதுண்டு.. ஆனால், இத்தகைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மிகத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பழைய அல்லது கிழிந்த நோட்டுகளை மாற்ற வேண்டுமானால், நீங்கள் குறிப்பிட்ட அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது.. எந்தவொரு பொதுத்துறை வங்கி அல்லது தனியார் வங்கி கிளைகளிலும் சிதைந்த நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு..

கிழிந்த ரூபாய் நோட்டு
பொதுவாக ரூபாய் நோட்டுகள் அவற்றின் நிலைளை பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.. முதலாவது, அழுக்கான நோட்டுகள்.. இவை அதிகப்படியான பயன்பாட்டினால் அழுக்கடைந்தவை அல்லது எண்ணெய் பட்டு நிறம் மாறியவை..
2 துண்டுகளாகக் கிழிந்து, அந்த இரண்டு துண்டுகளும் ஒரே நோட்டை சேர்ந்ததாக இருந்து, அதில் உள்ள எண்கள் தெளிவாகத் தெரிந்தால் அவை அழுக்கான நோட்டுகளாகவே கருதப்படும்.. இத்தகைய நோட்டுகளை எந்தவொரு வங்கியிலும் கொடுத்து முழுத் தொகையையும் உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம்..
செல்லாத சிதைந்த நோட்டுகள்
இரண்டாவது வகை, சிதைந்த நோட்டுகள்.. அதாவது நோட்டின் ஒரு பகுதி காணாமல் போனாலோ அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாகக் கிழிந்திருந்தாலோ அவை இந்த வகைக்குள் வரும்.. இத்தகைய நோட்டுகளை மாற்றும்போது சில முக்கிய அம்சங்கள் கவனிக்கப்படும்..
குறிப்பாக, நோட்டில் உள்ள வரிசை எண், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து, அசோகா தூண் சின்னம் மற்றும் வாட்டர் மார்க் எனப்படும் நீர் நிழல் அடையாளம் ஆகியவை சிதையாமல் இருக்க வேண்டும்.. இந்த அடையாளங்கள் ஓரளவு சரியாக இருந்தால், அந்த நோட்டின் பரப்பளவைப் பொறுத்து உங்களுக்கு முழுத் தொகையோ அல்லது பாதித் தொகையோ வழங்கப்படும்..
உதாரணமாக, 2000 ரூபாய் நோட்டில் 88 சதுர சென்டிமீட்டர் அளவுக்கு மேல் சிதையாமல் இருந்தால் முழுத் தொகையும், 44 சதுர சென்டிமீட்டர் வரை இருந்தால் பாதித் தொகையும் கிடைக்கும்.. இதேபோல் 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளுக்கும் அவற்றின் அளவைப் பொறுத்து வங்கிகள் பணத்தைத் திருப்பி அளிக்கும்..
RBI விதிகள்
ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 நோட்டுகள் அல்லது 5,000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை வங்கியில் நேரடியாக மாற்றலாம்.. இதற்கு மேல் அதிகப்படியான நோட்டுகள் இருந்தால், வங்கிகள் அவற்றை ஒரு ரசீதுடன் பெற்றுக்கொண்டு, பின்னர் சில நாட்களுக்குப் பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தும்..
3வது வகை, மிக மோசமாக சிதைந்த நோட்டுகள்.. அதாவது தீயில் கருகியவை, ரசாயனம் பட்டு உருமாறியவை அல்லது பல துண்டுகளாக ஒட்டப்பட்ட நோட்டுகளை சாதாரண வங்கி கிளைகளில் மாற்ற முடியாது.. இத்தகைய நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.. அங்குள்ள அதிகாரிகள் அந்த நோட்டுகளை ஆய்வு செய்து அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பிறகுதான் பணத்தைத் திருப்பித் தருவார்கள்..
கமிஷன் தேவையில்லை
வங்கிகள் உங்கள் நோட்டுகளை மாற்ற மறுத்தால், அது குறித்து ஆர்பிஐ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்.. புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வங்கிக்கு 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது..
எனவே, கிழிந்த நோட்டுகளைக் கண்டு அஞ்சாமல், அருகிலுள்ள வங்கிக்குச் சென்று உரிய முறையில் மாற்றிப் பயன்பெறுங்கள்.. பழைய அல்லது கிழிந்த நோட்டுகளை யாரிடமும் கமிஷன் கொடுத்து மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்..
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications