ரேஷன் கார்டு அப்ளை பண்ணீட்டீங்களா.. நாளைக்கே வரலாம்.. மிகப்பெரிய நல்ல செய்தி.. ரெடியா இருங்க
சென்னை: ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால் நாளை முதல் உங்களுக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்பதை நாளை முதல் அறியலாம். அதேபோல் புதிய குடும்ப அட்டை வாங்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம். ஏனெனில் நடத்தை விதிமுறைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ந் தேதி (அதாவது இன்று) வரை அமலில் இருக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது,

தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகளின் படி, ஒருவர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், மதுபான வகைகள், இலவச பரிசுப்பொருட்கள், போதை பொருட்கள் என ரூ.1,300 கோடிக்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் காட்டப்பட்ட பொருட்கள் மட்டும் திரும்ப தரப்பட்ன. தேர்தல் நடந்த மாநிலங்களில் எல்லாம் தீவிரமாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று நள்ளிரவோடு திரும்பப் பெறப்படுகின்றன. இனி பணம், பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது. அதேபோல் அரசு புதிய திட்டங்கள் அறிவிக்கவும், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் எந்த பிரச்சனையும் இல்லை. இதேபோல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய குடும்ப அட்டை தரவும் இனி எந்த கட்டுப்பாடும் இல்லை.
கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக குடும்ப அட்டை பெற முடியாமல் தவித்து வந்தவர்கள் மற்றும் குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்ய முடியாமலும் தவித்து வந்தவர்கள் நாளை முதல் எளிதாக மாற்றங்களை செய்ய முடியும். சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு கடந்த ஒரு வருடத்தில் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைககளை தொடர்ந்து நாளை முதல் விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் நேரடியாக இனி விண்ணப்பம் செய்யலாம். அல்லது இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் நகல் ஸ்மார்ட் கார்டு, கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற அத்தனை சேவைகளையும் நாளை (ஜூன் 6) முதல் மேற்கொள்ளலாம்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications