விஜயகாந்த் மருமகளை பார்த்துருக்கீங்களா.. இதுதான் அவர் - விஜய பிரபாகரனுக்கு ஜோடிப்பொருத்தம் எப்படி?
சென்னை: கேப்டன் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் திருமண நிச்சயம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அவரது திருமணம் எப்போது என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்தாலும் நிச்சயத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். எம்எல்ஏவாக வெற்றி பெற்று பத்தாண்டு களில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் என்ற அளவிற்கு உயர்ந்தவர்.
அரசியலில் கவனம் செலுத்தியதால், படங்களில் நடிப்பதைக் குறைத்தார். தற்போது தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு திரையுலகில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். இவருக்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

விஜயபிரபாகரன்
விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன், பாட்மிண்டன் அணி, நாய்களுக்கான போட்டி ஆகியவற்றைத் தொடர்ந்து, தேமுதிக கட்சிப் பணிகளையும் கவனித்து வருகிறார். விஜய பிரபாகரன் கடந்த சில வருடங்களாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். விஜயகாந்திற்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட போது கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் முழு மூச்சாய் ஈடுபட்டார்.

விஜயகாந்தின் மருமகள்
கடந்த 2019ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க உள்ளார் விஜயபிரபாகரன். இந்த நிலையில் விஜயகாந்த் உடல் நிலை காரணமாகவே திருமணம் நடைபெறுவது தள்ளிப்போகிறது. பிரதமர் மோடி தலைமையில் தனது மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என விரும்புகிறாராம் விஜயகாந்த். இதனால் பிரதமர் மோடியிடம் தேதி கேட்பதற்கான நடவடிக்கைகள் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

சினிமாவில் நடிக்க ஆசை
விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அவருடைய இளைய மகன் சண்முக பாண்டியன் நாயகனாக அறிமுகமானார். 'சகாப்தம்', 'மதுரை வீரன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது புதிய படமொன்றில் நடித்து வருகிறார். சண்முக பாண்டியனைத் தொடர்ந்து, மூத்த மகன் விஜய பிரபாகரனும் நாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார்.

நாயகனாக நடிக்க முயற்சி
நாயகனாக நடிக்க உடலைக் குறைத்து, போட்டோ ஷூட் எடுத்துத் தயாராகியுள்ளார் விஜயபிரபாகரன். நாயகனாக நடிப்பதற்கு முன்னோட்டமாக 'என் உயிர்த் தோழா' என்ற பாடலைப் பாடி நடனமாடி வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தநிலையில் விஜய பிரபாகரனின் திருமண நிச்சய போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் மகன் மருமகளுக்கு ஜோடிப்பொருத்தம் எப்படியிருக்கிறது என்று கேட்டு வருகின்றனர்.

மழை பிடிக்காத மனிதன்
விஜயகாந்த் நீண்ட நாட்களாகவே வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார். அவர் விஜய் ஆண்டனியுடன் விஜய் மில்டன் இணைந்து ' மழை பிடிக்காத மனிதன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிப்பதாகவும், பெரிய திரைகளுக்கு அவர் மீண்டும் வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பேசியுள்ள இயக்குநரோ, அவரது உடல்நிலை காரணமாக தாமதமாகிறது. ஆனால் அவரையே வைத்து படமாக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம். படத்தின் அவரது இருப்பு மிகவும் அவசியமானது. ஆனால் அவர் படத்தில் தோன்றுகிறாரா அல்லது அவரது குரலில் தோன்றுகிறாரா என்பதை நாம் பொறுத்திருக்க வேண்டும் என பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications