சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க அரசு மறுப்பு.. மனுதாரருக்கு ஹைகோர்ட் எச்சரிக்கை.. வழக்கு டிஸ்மிஸ்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

HC dismisses petition seeking the extension of Athi vardar darisanam

அந்த மனுவில், முதல்வர் அறிவித்தபடி, அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

குளத்தை சுத்தப்படுத்த கோரிய வழக்கில், தரிசனத்தை நீட்டிக்க கோரிய மனுவை ஏற்க மறுத்த நீதிபதி, அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது என்பது அரசின் முடிவுக்கு உட்பட்டது எனத் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏராளமான மக்கள் தரிசனம் செய்யாததால் பொது நலனைக் கருதி தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரினார்.

ஆனால், தரிசனம் நீட்டிக்கப்பட மாட்டாது என அறநிலைய துறை அமைச்சரே அறிவித்துள்ளதாக அரசுத்தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாக நீதிபதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

English summary
Madras HC has dismissed the petition seeking the extension of Athi vardar darisanam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X