கோவில் சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன - அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
கச்சாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மீட்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் சென்னையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கச்சாலீஸ்வரர் ஆலயத்துக்கு சொந்தமான தெப்ப குளத்தில் நடத்தப்படும் விழாவில் அருள்மிகு கச்சாலீஸ்வரர், அருள்மிகு காளியம்மன், அருள்மிகு முத்துகுமாரசுவாமி, அருள்மிகு சிவ சண்முக விநாயகர், அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய தெய்வங்கள் பங்கேற்கின்றன. 5 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறும்.

ஆலயத்தை சரியாக பராமரிக்காததால், குளத்தின் தண்ணீர் வரத்து தடைபட்டு கடந்த 9 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடத்தப்படாமல் உள்ளது. குளத்தை சுற்றியுள்ள சுவர்கள் சிதிலமடைந்து காணப்படுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
இதுகுறித்து, தமிழக ஆளுநர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், ஆலயத்தை பராமரிக்கவும், கோவிலை சுற்றியுள்ள கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை கண்டறிய ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து அதை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
திருச்செந்தூர் கோவில் சிறப்பு தரிசன டிக்கெட் முறைகேடு .. புகாரில் சிக்கியவர்கள் நிம்மதி -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications