குடிநீர் வழங்க கோரி போராடிய 32 பேர் மீதான வழக்கு ரத்து.. உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: குடிநீர் வழங்க கோரி போராடிய 32 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த பழையகோட்டை கிராமத்தில், தொடர்ந்து பல நாட்கள் குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக 32 பேருக்கு எதிரான வழக்கு காங்கேயம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு காரணமாக இரண்டாம் நிலை காவலர் பணி வாய்ப்பை இழந்த நித்தியானந்தம் என்பவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீண்ட காலமாக குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியான போராட்டம் மூலமாகவே வெளிப்படுத்துவார்கள் என்றும், குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது குற்றவழக்குகள் பதிவு செய்வது என்பது அரசு இயந்திரத்தின் பக்குவத்தை வெளிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், குடிநீர் கேட்டு போராடியதற்காக 32 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications