ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது.. சபாநாயகரால் பேசாமல் இருக்க முடியவில்லை.. ஜெயக்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது. டிபேட்டில் ( தொலைக்காட்சி விவாதத்தில் ) கலந்து கொண்டவர்.. அவரைப் போய் சபாநாயகராக உட்கார வைத்தால் அவர் வாய் சும்மா இருக்குமா என்று அப்பாவுவை விமர்சித்து ஜெயக்குமார் பேசினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு கிடைக்கும். அதிமுக ஆட்சியில் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதை சிறுபான்மை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். முதலில் வாழக்கூடிய உரிமை பிறகுதான் சலுகை. அந்த இரண்டுமே நாங்கதான் (அதிமுக) கொடுத்து இருக்கிறோம்.

 he cant stop talking: AIADMK Jayakumar slams TN assembly speaker appavu

திமுகவை பார்த்தால் உதட்டில் தேனை தடவி விட்டு போய்விடுவார்கள். அதனால் ஒரு பிரையோஜனமும் கிடையாது. அது அவர்களுக்கு தெரிகிறது. 2021-ல் தேர்தல் நடந்தது. தமிழ்நட்டில் தேனும் பாலும் ஆறும் ஓடும்.. அப்படியே சிறுபான்மை மக்கள் அனைவரும் பெரிய ஏற்றம் பெறுவார்கள் என்றார்கள். ஆனால், அப்படி ஏற்றம் எதுவும் பெறவில்லை.

சர்வாதிகாரியாக: அந்த குடும்பம் தான் ஏற்றம் பெற்றதே ஒழிய...எந்த ஒரு சிறுபான்மையின மக்களாவது பொருளாதார ரீதியாக, கல்வி ரீதியாக ஏற்றம் பெறுவதற்கான திட்டங்களை அவர்கள் கொண்டு வந்தார்களா... இல்லை சமூக ரீதியான ஏற்றத்திற்கு எதுவும் திட்டம்கொண்டு வந்தார்களா..எதுவுமே இல்லை.. சர்வாதிகாரியாக கூட்டணி கட்சிகளை தான் சொல்வதைத்தான் கேட்க வெண்டும் என்று வைத்து இருந்தார்.

எங்க கிட்ட தான் வரணும்: இப்போ எல்லோரும் தலை நிமிர ஆரம்பித்து விட்டர்கள்.. நான் கேட்கும் சீட்டுகளை கொடுக்கிறீர்களா இல்லையா... இல்லையென்றால் ஆளை விடுங்க நான் போறேன் என்று கட்சிகள் சொல்ல ஆரம்பித்து விட்டன. எனவே எங்க கிட்ட தான் வரணும்.. யாரை யாரை கூட்டணியில் சேர்க்க வேண்டும்.. என்னென்ன வியூகங்கள் என்பதை கட்சி முடிவு செய்யும்.

சட்டப்பேரவை தலைவர் தான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் கேள்விக்கு பதிலளிக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது. டிபேட்டில் ( தொலைக்காட்சி விவாதத்தில் ) கலந்து கொண்டவர்.. அவரைப் போய் சபாநாயகராக உட்கார வைத்தால் அவர் வாய் சும்மா இருக்குமா.. அவரேதான் பேசிக்கொண்டு இருப்பார்..
ஒரு மரபு இருக்கிறது: அவரை அமைச்சராக ஆக்கியிருந்தால் பிரச்சினை இருக்காது. தற்போது அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. சபாநாயகருக்கு என்று மரபு இருக்கிறது. அந்த மரபை காப்பாற்ற வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் மரபு பின்பற்றப்பட்டது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் நியாயமான கோரிக்கை முன்வைத்தால் அவர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் இப்போது பேசுவதற்கே வாய்ப்பு இல்லையே..

மைக்கை ஆஃப் செய்கிறார்கள்: சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் பேசுகிறார்... மைக்கை ஆஃப் செய்கிறார்கள். அந்த அளவுக்கு ஸ்டாலினுக்கு பயம் இருக்கிறது. மைக் ஆஃப் செய்து விட்டால்.... சீப் ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்னுவிடுமா... தமிழ்நாட்டிற்கே தெரியும். காவிரி வரலாற்றில் உரிமையை நிலை நாட்டக்கூடிய வகையில் நடவடிக்கை எடுத்தது அதிமுகதான்.

திமுக கிஞ்சித்தும் கிடையாது. 1972ல் விவசாயிகள் உச்ச நீதிமன்றம் செல்ல முயற்சித்தார்கள். அப்போது போகக்கூடாது வழக்கை வாபஸ் வாங்குங்கள் என்று மிரட்டியது கருணாநிதிதான். அன்னைக்கு முதல்வாக இருக்கும் போது மிரட்டினார். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+