துண்டு சீட்டு பறந்து சென்றுவிட்டது.. ஸ்டாலின் அப்படியே காப்பியடித்துவிட்டார்.. கமல்ஹாசன் பொளேர்!
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் காப்பி அடித்துவிட்டார் என்று கமல்ஹாசன் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
திருச்சியில் நேற்று திமுக சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் இதில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 7 துறைகள் 7 உறுதிமொழிகள், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்குத் திட்டங்கள் போன்றவற்றை ஸ்டாலின் அறிவித்தார்.
ரேஷன் கார்ட் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். நேற்று நடந்த இந்த மாநாட்டில் 2 லட்சம் பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

காப்பி
இந்த நிலையில் திருச்சி பொதுக்கூட்டத்தில் திமுக வெளியிட்ட இந்த அறிவிப்புகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். ஸ்டாலின் என்னுடைய திட்டத்தை காப்பி அடித்துவிட்டார். இல்லதரசிக்கு ஊக்க தொகை வழங்குவோம் என்று கூறியதை திமுக காப்பியடித்துவிட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலினுக்கு நாங்கள் தான் டயலாக் சொல்லி கொடுத்துள்ளது போல் பேசுகிறார். நாமே தீர்வு என்றால் அவர், ஒன்றிணைவோம் வா என்கிறார். தற்போது இல்லதரசிக்கு ஊக்க தொகை என்றால் அதையும் அவர் அறிவிக்கிறார். 7 உறுதிமொழி உட்பட திமுகவின் அனைத்து அறிவிப்பும் காப்பி அடிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகும்.

திட்டம் இல்லை
மக்கள் நீதி மய்யம் எழுதி வைக்கும் காகிதங்கள் பறந்து சென்று, துண்டு சீட்டாக மாறி திமுகவிடம் சேருகிறது. இதை படித்து ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிடுகிறார். எதுவும் அவர்களின் சொந்த திட்டம் இல்லை.

தமிழகம் தப்பித்தது
அரசியலை விட்டு 30 வருடம் முன்பே விலகியிருந்தால் தமிழகம் தப்பித்து இருக்கும். இப்போது "அவர்"அரசியலை விட்டு விலகி இருக்கிறார். சமையகட்டிலிருந்து சதி செய்வது தான் உங்கள் அரசியலா? நீங்க அரசியலுக்கு வந்ததும், அரசியலை விட்டு விலகியதற்கும் ஒரே காரணம்தான் இருக்கிறது .. உங்களுக்கு பணம் சம்பாதிக்க ஆசை. எனக்கு அப்பாகிட்டயும் பயம் இல்ல, அம்மா கிட்ட பயம் இல்ல.

காங்கிரஸ்
காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்தது உண்மை. இது எல்லோருக்கும் தெரியும். இதை வதந்தி என கூறுவது காங்கிரசின் நிலைப்பாடு. கயவரக்ள் அனைவர் பற்றியும் பேசுவது என் கடமை. இரண்டு கட்சிகளும் ஊழல் திலகங்கள். இவர்களை மொத்தமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டியது நமது கடமை என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications