ரேஷனில் இந்த மாசம் "பாமாயில்" வாங்கிட்டீங்களா? அப்ப முதல்ல இதை செய்யுங்க..இத்தனை நாளா தெரியாம போச்சே
சென்னை: ரேஷன் கடைகளில் வாங்கும் பாமாயிலை உபயோகிப்பவரா நீங்கள்? இதில் உள்ள நன்மை + தீமைகளை பற்றி முழுமையாக உங்களுக்கு தெரியுமா?
எண்ணெய் என்றாலே அதன் விலை அதிகம் என்றே மனதில் பதிந்துவிட்டது.. வழக்கமாக உடல்பருமனாக இருப்பவர்கள், டயட்டில் இருப்பவர்கள், சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யில் அதிக கவனத்தை செலுத்துவார்கள்.
சில சமயங்களில் எண்ணெய்யை பயன்படுத்தாமலேயே சமையலை செய்பவர்களும் உண்டு. ஆனால், உண்மையை சொல்லப்போனால், எண்ணெயில் ஆரோக்கியமும் ஒளிந்து கொண்டிருக்கிறதாம்..
ரேஷன் கடை: அதிலும், ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் பாமாயில், மலிவு விலை என்பதால், பெரும்பாலானவர்கள் இதை பயன்படுத்தி வருகிறோம்.. இந்த பாமாயிலில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? இதில், விட்டமின் ஏ, விட்டமின் ஈ அதிக அளவு காணப்படுகிறது.. மேலும், பீட்டா கரோட்டின் அதிகமாக இருக்கிறது.. இதனால், கண் சார்ந்த பிரச்சினைகளை சீர்செய்து, தெளிவான பார்வை கிடைக்க உதவுகிறது.. அத்துடன் ரெட்டினா குறைபாட்டையும் சரி செய்கிறது..

இயற்கையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருக்கின்றன என்கிறார்கள்.. நம் உடம்பில் உருவாகக்கூடிய கெட்ட செல்களை ஒழித்துவிடக்கூடியவை.. புற்றுநோய் செல்களையும் ஒழித்துவிடக்கூடியவை...
இதில், விட்டமின் ஈ நிரம்பி உள்ளதால், இளமையான சருமத்தையும், ஹார்மோன் சமநிலையையும் தரக்கூடியது.. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இதில் கொழுப்பு சத்துக்களும் இதில் அதிகம் கலந்துள்ளன..
அதனால்தான், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பாமாயிலை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். மேலும், இதய பிரச்சனை இருப்பவர்கள், தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஆகிய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் பாமாயில் எண்ணெய்யை அப்படியே பயன்படுத்தக் கூடாது. அத்துடன், திடீரென பாமாயிலை பயன்படுத்துபவர்களுக்கு, சில சமயம், வாந்தி, பேதி, மயக்கம் என உடல்நல பாதிப்பை தந்துவிடும்.. அதுமட்டுமல்ல, பாமாயிலில் சமைத்தால், உடலில் பித்தமும் அதிகரிக்கும்..
பாமாயிலை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது? : ஒரு அகலமான வாணலியில், ரேஷன் பாமாயிலை ஊற்றி லேசாக சூடு செய்ய வேண்டும்.. கொதிக்கவிடக்கூடாது.. பாமாயில் புகை வரும் அளவிற்கு காய்ச்சும் போது, அதில் தீப்பற்ற வாய்ப்புள்ளது. அதனால் மிதமான தீயில் கவனமாக காய விடுங்கள். எண்ணெய் லேசாக சூடேறியதும், எலுமிச்சம் அளவு புளியை எடுத்து, அதற்குள் கல் உப்பை திணிக்க வேண்டும்.. எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு உப்புக்கல்லை, அந்த புளிக்குள் வைத்து வெளியே வராதவாறு திணிக்க வேண்டும்..
சிறிய அளவு இஞ்சி துண்டு தோல் சீவி வைத்துக் கொள்ள வேண்டும்.. எண்ணெய் லேசாக சூடேறியதும், புளி உருண்டை + இஞ்சி துண்டு இரண்டையும் சேர்த்துவிட வேண்டும்.. எண்ணெயில் புளி போடும்போதும், இஞ்சி போடும்போதும் பொறியும். அப்படியே ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
நுரைகள்: பாமாயிலில் உள்ள பித்தம் மொத்தத்தையும், இந்த பொருட்கள் உள்ளிழுத்து ஈர்த்து கொள்ளும்.. புளியின் நிறமே கருப்பாக மாறிவிடும். எண்ணெய் காய்ந்து நுரைபோல பொங்கும்.. சிறிது நேரத்தில் நுரைகள் அடங்கியதும், புளி, இஞ்சி இரண்டையும் வெளியே எடுத்துவிட வேண்டும்.. பிறகு பாமாயிலை நன்றாக குளிர்விக்க வேண்டும். இறுதியில், துணி வடிகட்டியால் வடிகட்டி, ஒரு பாட்டிலில் நிரப்பி பயன்படுத்தலாம்.. இதில் எந்த ஆபத்தும் இல்லை.. சத்துக்களும் வீணாகாது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications