"விஜய்க்கு உடல்நல பிரச்சனை? ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை" என தகவல்! அதான் பிரச்சாரம் ரத்தாம்!
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு உடல்நல பாதிப்புகள் இருப்பதாகவும் அவரை சில வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. தவெக தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி எப்படியும் ஆட்சியை பிடித்துவிடும் என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் 233 தொகுதிகளிலும் (ஒரு தொகுதியில் தவெக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு) விஜய் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வகையில் கடந்த 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை தவெக சார்பில் விஜய்க்கு பிரச்சார பயணம் திட்டமிடப்பட்டது.
கடந்த 30- ஆம் தேதி பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய் அங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தாய் வீட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
அங்கிருந்து மாலையில் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் வில்லிவாக்கத்தில் அவரது பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அது போல் ஏப்ரல் 6ஆம் தேதி மீண்டும் வில்லிவாக்கம், திநகரில் விஜய் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. அதையும் ரத்து செய்துவிட்டார்.
ஏப்ரல் 7 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார். ஏப்ரல் 8ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
ஏப்ரல் 9ஆம் தேதி கடலூரில் பிரச்சாரம் என அறிவிக்கப்பட்டு அது 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஏப்ரல் 10-ஆம் தேதி காரைக்குடியில் விஜய் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அவர் பிரச்சாரம் செய்ய வந்ததால் ஒரு வார்த்தை கூட பேசாமல் வேட்பாளரை அழைத்து அவரது கையை உயர்த்தி காட்டி, அவருக்கு வாக்களிக்குமாறு செய்கையிலேயே பேசினார். அவரது பேச்சை கேட்க கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்கில் நின்றிருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

நேற்றைய தினம் கடலூர் பிரச்சாரத்திற்காவது விஜய் குறித்த நேரத்திற்கு வந்து ஏதாவது பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய பரப்புரையும் ரத்தாகியுள்ளது. விஜய் பிரச்சாரம் செய்கிறார் என்பதால் உதயநிதிக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இன்று கன்னியாகுமரியில் நடக்கும் ரோடு ஷோ ரத்தாகுமா என சந்தேகம் எழுந்த நிலையில் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டார். நாளை கும்மிடிப்பூண்டியில் நடக்கவிருந்த பிரச்சாரமும் ரத்தாகியுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து அவரது பிரச்சாரங்கள் ரத்தாவதால் தவெகவினர் அதிருப்தியில் இருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் எதற்காக பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்கிறார் என்பது குறித்து விசாரித்த போது ஒரு தகவல் கிடைத்தது.
தவெக தலைவர் விஜய்க்கு உடல்நல பாதிப்புகள் இருப்பதாகவும் அவரை சில வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. எனினும் குமரியில் நடக்கும் ரோடு ஷோவில் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
-
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications