குறையாத காய்ச்சல் .. இரவோடு இரவாக அப்பல்லோவில் ‘அட்மிட்’ ஆன அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர்.

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அன்று மாலையே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். எனினும் காய்ச்சல் மற்றும் உடல் சோா்வால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த 2 நாள்களாக ஓய்வில் இருந்து வந்தாா்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், நேற்று காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அவரது உடல்நிலையைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். தற்போது அமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென் சென்னை திமுக மாவட்ட செயலாளராக இருக்கும் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயராகச் சிறப்பாகச் செயல்பட்டவர். தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் மா.சுப்பிரமணியன், தனது துறையின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையின் தரத்தை பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.
உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சிகளை மேற்கொண்டு வருபவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன். நூற்றுக்கணக்கான மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். உடலைப் பேணிக் காப்பதில் இளைஞர்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர் மா.சுப்பிரமணியன். அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீட்டில் கீழே விழுந்ததன் காரணமாக காலில் காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக அண்மையில் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications