கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. தமிழகத்தில் 3 நாட்கள் தடுப்பூசி பணிகள் நிறுத்தம்.. ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழகத்தில் ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது. ஆனாலும் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.

கொரோனா தடுப்பூசி பணிகள்
அதேபோல தடுப்பூசி பணிகளையும் வேகப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தற்போது மக்களும் அச்சமின்றி அதிகளவில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பற்றாக்குறை காரணமாக ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி பணிகள் நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஒதுக்கீடு
இது தொடர்பாகச் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ்களை ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மே மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டியுள்ளது. தமிழகத்தில் தற்போது 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

2 நாட்களுக்கு தேவையான தடுப்பூசி
இதை வைத்துக் கொண்டு 2 நாட்கள் மட்டுமே தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள முடியும். கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய பணம் செலுத்திய பிறகும், தடுப்பூசிகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு அடுத்து 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு தடுப்பூசியை ஒதுக்கீடு செய்யதால் மட்டுமே தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும்.

தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6ஆம் தேதி தான் வரும் என்பதால் ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும்" என்று மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications