சிக்கனை இப்படி பார்த்து வாங்குங்க.. கோழிக்கறி "இந்த" கலரில் இருக்கணும்.. அந்த 4 விஷயம் கவனிச்சீங்களா
சென்னை: சிக்கன் பிரியர்கள் அதிகம் இருந்தாலும், கடையில் கோழிக்கறி வாங்கும்போது, சில முக்கியமான விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும்.
சிக்கனில் ஏகப்பட்ட புரதம் இருக்கிறது.. அத்துடன், பல்வேறு ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன.. குறிப்பாக, வைட்டமின் பி12 நிரம்பி உள்ளது.. இதனால், சிக்கனை சாப்பிட்டடால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

எலும்புகள்: மேலும், எலும்புகளை பாதிக்கக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுத்து, எலும்புகளை ஆரோக்கியம் பெறச் செய்கிறது. இன்னும் ஏகப்பட்ட நன்மைகள் இந்த சிக்கனில் இருந்தாலும், சிலருக்கு எப்படி சிக்கன் வாங்குவது என்று தெரிவதில்லை.
சிக்கனின் தோற்றம், சாம்பல் கலரில் இருந்தால் அதை வாங்க கூடாது.. எப்போதுமே சிக்கனின் சதைப்பகுதி பிங் நிறத்தில் இருக்க வேண்டும்.. அதுதான், ஃபிரெஷான சிக்கன் என்று அர்த்தம். சிக்கன் வெட்டப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரைக்குள் ரத்த உறைவு இருந்தால் துர்நாற்றம் இருக்காது.
பழைய சிக்கன்: அதேபோல, சிக்கனை கழுவும்போதும், நல்ல சிக்கனா? பழைய சிக்கனா? என்று தெரிந்துவிடும்.. கழுவும்போது துர்நாற்றம் வந்தாலே, அது பழைய கோழிக்கறிதான்.. அதுமட்டுமல்ல, சிக்கனின் மேல்புறம் பச்சை கலரிலோ அல்லது கருப்பு கலரிலோ இருந்தால், அதுவும் பழைய சிக்கன்தான். அல்லது நோய்வாய்ப்பட்ட கோழியாகவும் இருக்கலாம்.
எப்போதுமே சிக்கனை ஏற்கனவே கட் செய்து, ஃப்ரிஜ்ஜில் வைக்கப்பட்டிருந்தால் அதை வாங்க வேண்டாம்.. அந்த கோழியை எப்போது அறுத்தார்கள் என்றுகூட நம்மால் கண்டுபிடிக்க முடியாது.. அதேபோல, சூப்பர் மார்க்கெட்டுகளில் பேக் செய்யப்பட்ட சிக்கனையும் தவிர்க்கலாம்.. அப்படியே வாங்குவதாக இருந்தாலும், அந்த பாக்கெட்டில் உள்ள தேதியை கவனிக்க வேண்டும்.
கவரில் தண்ணீர்: அதேபோல, அந்த பேக்கிங்கை பிரிக்கும்போது, அந்த கவரின் அடியில் தண்ணீர் வடிந்திருக்கிறதா? என்று பார்க்கவேண்டும்.. தண்ணீர் வடிந்து, கவரின் அடியில் தேங்கி கிடந்தால் அது பழைய சிக்கன்.. அதேபோல, சிக்கன் வாங்கினால் சேர்த்து வாங்க வேண்டும். இந்த எலும்பில் கால்சியம் உள்ளதுடன், ருசியை தருவது இந்த எலும்புகள்தான்.. போன்லெஸ் சிக்கன் என்று கேட்டு வாங்கினாலும், எலும்புகளிலும் சத்து உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications