• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈரக்குலையே நடுங்கிடுச்சே.. மாதவரம் மதரஸாவில் கேட்ட சத்தம்.. மொத்தம் 12 பேராம்.. 2 பேரை தூக்கிய போலீஸ்

மாதவரத்தில் செயல்பட்டு வரும் மதரஸாவை சேர்ந்த 2 பேர் கைதாகி உள்ளனர்
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாதவரத்தில் செயல்பட்டு வரும் மதரஸா மீது பகீர் குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது.. இதையடுத்து மதரஸாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. என்ன நடந்தது மாதவரத்தில்?

மதரஸாக்கள் குறித்த மதக் கல்வியுடன் கூடிய கல்வியானது, மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது.. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மதரஸாக்கள் இதற்காகவே இயங்கியும் வருகின்றன..

மதரஸாவில் சிறுபான்மையின மாணவர்கள் மட்டுமே கல்வி பெறுகிறார்கள் என்ற நிலைமை மாறி, இஸ்லாமியர் அல்லாத மாணவர்களும் படிக்கிறார்கள் என்ற தகவல்கள் அடிக்கடி வெளிவருவதையும் ஆரோக்கியமான சூழலாக பார்க்க முடிகிறது..

கையில் துப்பாக்கி! மதரஸா போகும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு தந்த தந்தை.. குலுங்கிய கேரளா.. என்ன காரணம்?கையில் துப்பாக்கி! மதரஸா போகும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு தந்த தந்தை.. குலுங்கிய கேரளா.. என்ன காரணம்?

குறி

குறி

ஆனால், பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் மதரஸாக்கள் குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.. குறிப்பாக, மதரஸாக்களில் என்ன போதிக்கப்படுகிறது என்பது கண்காணிக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் சொல்லவருகிறார்கள். அதிலும் இந்த விஷயத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் கொஞ்சம் ஓவராகவே சென்று கொண்டிருக்கிறது.. அம்மாநிலத்தில் மதரஸாக்களுக்கான மானியத்தையே நிறுத்திவிட்டது.. சிறுபான்மையினருக்கு மதராசா கல்வி அவசியம் என்றாலும், தேசியகீதம் பாடுவதும் அவசியம் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது..

 டீச்சர் தொல்லை

டீச்சர் தொல்லை

அவ்வளவுஏன், அஸ்ஸாமில்கூட, ஒருசில மதரஸாக்களை புல்டோசர் கொண்டு அவற்றை பள்ளிகளாக மாற்றும் அளவிற்கு சென்றதையும் இங்கு நினைவுகூரத்தக்கது. இப்படி எத்தனையோ விஷயங்கள் மதராஸாவுக்கு எதிராக பாஜக தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில், கல்வியை போதிக்கும் மதராஸாவிலேயே, ஒருசிலரால் அவப்பெயர் நேர்ந்துவிடுவது கவலைக்குரியதாக உள்ளது.. சமீபத்தில்கூட தெலுங்கானாவில் ஒரு சம்பவம் நடந்தது.. ஹைதராபாத்தில் சந்தோஷ் நகர் பகுதியில் இயங்கி வரும் மதரஸாவில், 21 வயது மதரஸா ஆசிரியர் ஒருவர், 14 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்ததால், கைதாகி இருந்தார்.

துன்புறுத்தல்

துன்புறுத்தல்

இதோ இப்போது நம் சென்னையிலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில், மதரஸா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை பீஹாரை சேர்ந்த அக்தர் என்பவர் நிர்வகித்து வருகிறார்... இங்கு படித்துவரும் குழந்தைகளை, பள்ளி நிர்வாகிகள் சிலர் அடித்து துன்புறுத்துவதாக, சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.. இதையடுத்து, அந்த புகாரின்பேரில், மாதவரம் போலீஸார் உதவியோடு அந்த பள்ளிக்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர்.. அங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்த வெளிமாநிலத்தை சேர்ந்த 12 குழந்தைகளை கண்டு அதிர்ந்து போனார்கள்..

 ஃபர்ஸ்ட் எய்ட்

ஃபர்ஸ்ட் எய்ட்

அந்த 12 குழந்தைகளும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான்.. அவர்களை மீட்ட அதிகாரிகள், உடனடியாக முதலுதவி சிகிச்சை தந்தனர்.. பிறக, ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் அவர்களை ஒப்படைத்தனர்... இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகள் மாதவரம் போலீசிலும் புகார் அளித்தனர்... அதன் பேரில் போலீஸாரும் விசாரணையை துவக்கினர்.. அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.. பீஹாரில் அரபிக் வகுப்புகள் நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தினால்தான், அம்மாநில குழந்தைகள் சிலர், இங்கே வந்து மதரஸா பள்ளியில் தங்கி, அரபி வகுப்புகள் படித்து வருகிறார்களாம்.

 ரத்தக்காய தழும்பு

ரத்தக்காய தழும்பு

இதில், சரியாக படிக்காத குழந்தைகளை நிர்வாகிகள் சிலர் அடித்து தாக்கியிருக்கிறார்கள்.. குறிப்பாக, கேபிள் வயர்களால் அந்த பிஞ்சு குழந்தைகளை அடித்து துன்புறுத்தியது தெரியவந்துள்ளது.. இதில் சில குழந்தைகளின் உடலில் ரத்தக்காய தழும்புகளை பார்த்து அதிகாரிகள் பதறிப்போய்விட்டனர்.. இதனையடுத்து பள்ளி நிர்வாகிகள் அக்தர் மற்றும் அப்துல்லா ஆகியோர் மீது குழந்தைகளை அடித்து சித்தரவதை செய்தல், காயம் ஏற்படுத்துதல், அடைத்து வைத்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து, புழலில் அடைத்துள்ளனர் போலீசார்.

 அலறல் சத்தம்

அலறல் சத்தம்

ஆனாலும், சர்ச்சையில் சிக்கியுள்ள இந்த மீது வேறு ஏதேனும் புகார்கள் உள்ளதா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரணம், இந்த குழந்தைகள் பயங்கரவாத செயல்களுக்காக கடத்தப்பட்டு, மூளைச்சலவை செய்ய செய்யும் வகையில் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. அதுமட்டுமல்ல, பல சமயம் இந்த மதரஸாவில் இருந்து அலறல் சத்தம் அடிக்கடி கேட்குமாம்.. "அந்த அலறலை கேட்டாலே எங்கள் ஈரக்குலையே நடுங்கிவிடும்" என்று அந்த பகுதி மக்களே குற்றஞ்சாட்டுகிறார்கள்.. அதனால், தமிழகஅரசு முறையான நடவடிக்கை எடுத்து, அந்த மதரஸாவுக்கு உடனே சீல் வைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலிய கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.

 ஆதங்ககுரல்

ஆதங்ககுரல்

இப்படித்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் உள்ள மதரஸா பள்ளியில், அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக அங்கிருந்து 2 மாணவிகள் தப்பி வந்து, போலீசில் புகார் கூறியிருந்தனர்.. எனவே, குழந்தைகள் படிக்கும் இந்த மதரஸா பள்ளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய செய்யும் என்றும் வேண்டுகோள்கள் அக்கறை கலந்த ஆதங்கத்துடன் வெடித்து வருகின்றன..

English summary
Heartbreaking news and 12 bihar children rescued from arabic madrasa school in madhavaram Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X