கத்திரி வெயில் முடிந்தாலும் கவனம்.. தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுமாம்!..வானிலையின் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டின் உள் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நீடித்தது. தொடக்கத்தில் அவ்வப்போது மழை பெய்து வெப்பத்தின் தாக்கத்தை தணித்தது. மோச்சா புயலின் தாக்கத்தால் கோடை காலத்தின் வெப்பத்தை மக்கள் படிப்படியாக உணரத் தொடங்கினர். பல ஊர்களில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் பதிவானது.

மே மாதத்தின் இறுதியில் வெயில் சுட்டெரித்தாலும் ஆங்காங்கே கோடை மழை பெய்து மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்தது. சென்னையில் வரலாறு காணாத வகையில் 42 டிகிரி செல்சியஸ் வரை கடந்த வாரங்களில் வெப்பநிலை பதிவானது.
சென்னையில் நேற்றும் வெயில் வறுத்தெடுத்தது. பிற்பகல் முதல் மாலை வேளை வரை நகரின் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. மதுரை, விருதுநகர்,கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்த நிலையில்தான் அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலின் நகர்வை பொறுத்துதான் நமக்கு தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது தெரியவரும்.
கத்திரி வெயில் காலம் முடிந்து ஒரு வாரம் கடந்த பின்னரும் வெயிலில் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 13 ஊர்களில் 40 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் - 40.1 செல்சியஸ், சென்னை மீனம்பாக்கம் 40.8 செல்சியஸ், திருத்தணி - 40.6 செல்சியஸ், மதுரை - 40.2 செல்சியஸ், பாளையங்கோட்டை - 40 செல்சியஸ், கடலூர் - 39.8 செல்சியஸ், ஈரோடு - 38.4 செல்சியஸ், கரூர் - 39.5 செல்சியஸ், நாகை - 39.1 செல்சியஸ், தஞ்சை - 39 செல்சியஸ், திருப்பத்தூர் - 38.8 செல்சியஸ், திருச்சி - 39.6 செல்சியஸ், தூத்துக்குடி - 38.5 செல்சியஸ், வேலூர் - 39 செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 6ஆம் தேதியன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 9ஆம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் இன்று முதல் 9ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications