திருவள்ளூரில் கடும் பனிமூட்டம்..விடியலை காணாத வீதிகள்..முகப்பு விளக்குகளுடன் சென்ற வாகனங்கள்
சென்னை: கடும் பனிமூட்டம் காரணமாக திருவள்ளூர் ரயில் நிலையங்களில், ரயில் வருவது தெரியாமல் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர். முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.
மார்கழி மாதத்தில் பனியில் நனையவே அதிகாலையில் பலரும் கோவிலுக்கு செல்வார்கள். வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் கடும் குளிர் நிலவுகிறது. புகைமூட்டமாக பனி படர்ந்த சாலைகளில் குளிர குளிர சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர்வாசிகள் வாக்கிங் செல்வதை காணமுடிகிறது.
பனியை விரும்பாத பலரோ போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்குவதையும் காணமுடிகிறது. கடந்த மாதம் மூடுபனியால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் கும்மிடிப்பூண்டியில் கடும் பனிமூட்டம் காரணமாக கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் முகப்புகளை எரிய விட்டு அனைவருக்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தச்சூர் கவரப்பேட்டை மாதர்பாக்கம் ஆரம்பாக்கம் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் நேற்று காலை முதல் பூத்தூரில் மழை பெய்து வந்த நிலையில் மதியம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அதிக அளவில் சிரமத்திற்கு ஆளாகினர்.
இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது. அதிகாலையில் மூடுபனி காரணமாக புகை மூட்டமாக காணப்பட்டது. கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல சாலைகள் பனியால் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் தங்களது முகப்புகளை எரியவிட்டபடியே வாகனங்களை செலுத்தினார்கள்.
பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மெதுவாகவே வாகனங்களை இயக்கி வருகின்றனர் அதேபோல் ரயில்வே தண்டவாளங்களும் மூடுபனியால் சூழப்பட்டதால் பல பகுதிகளில் ரயில்கள் தாமதமாகவே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது ஆனால் கும்மிடிப்பூண்டியை பொறுத்தவரை ரயில்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
சென்னை புறநகர் பகுதிகளிலும் மூடுபனி நிலவியது. சென்னைக்கு வரும் வாகனங்கள் ரயில் நிலையங்களுக்கு மெதுவாக இயக்கப்பட்டதால் வேலைக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications