அப்போது தொடங்கியது.. இன்னும் முடியவில்லை.. தமிழகத்தை புரட்டி எடுக்கும் வானிலை.. இன்று மிக மோசம்!
சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிக கடுமையான வெப்பநிலை நீடித்து வருகிறது. அதிலும் சென்னையில் மிக மோசமான வானிலை நிலவி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக் கொண்ட வருகிறது. முக்கியமாக ஆம்பன் புயல் தோன்றி கரையை கடந்ததில் இருந்தே வெப்பநிலை அதிகமாக இருக்கிறது. ஆம்பன் புயல் விட்டுச்சென்ற காற்று காரணமாக இந்த வெப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் வடக்கு மாநிலங்களில் இருந்து வெப்பநிலை வருகிறது. முக்கியமாக தமிழகத்திற்கு ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் இருந்து வெப்பநிலை வருகிறது.

சென்னை நிலை
இன்று சென்னையில் பல இடங்களில் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நீடித்தது. முக்கியமாக தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 38.8 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் நிமிடத்திற்கு நிமிடம் வெப்ப காற்று அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஆந்திராவில் இருந்து வரும் வெப்ப காற்று சென்னையில் அதிகமாக வீசி வருகிறது.

அடுத்த இரண்டு நாட்கள் எப்படி
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கும் அனல் காற்றுடன், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மக்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முக்கியமாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெப்ப காற்று அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை மையம் கோரிக்கை வைத்துள்ளது.

வடக்கு மாவட்டம் எப்படி
தமிழகத்தில் வடக்கு மாவட்டங்களில்தான் அதிகமாக வெப்பநிலை இருக்கும். அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களாக வேலூரில் அதிகமாக வெப்பநிலை நிலவி வருகிறது.

வேலூர் நிலை
வேலூரில் நேற்றும் நேற்று முதல் நாளும் 42 டிகிரி செல்ஸியஸ் நிலவியது. இன்றும் அதே அளவு வெப்பநிலை வேலூரில் நிலவும் என்று கூறுகிறார்கள். அதேபோல் திருத்தணியில் இரண்டு நாட்களாக 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. இன்று அந்த வெப்பநிலை 43 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை தொட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications