தமிழ்நாடு முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. சென்னையில் குவிக்கப்பட்ட போலீஸ் படை.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் 17 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மெரினா, பெசன்ட் நகர் பீச்சுகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Heavy police protection all over Tamil Nadu, especially in Chennai ahead of Kaanum Pongal

வேலூர் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். கோவையில் 2800 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். வேளாங்கன்னியில் சுமார் 1000 போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு முக்கிய இடங்களுக்கு பொதுமக்கள் வருகை அதிகரித்து உள்ளது. மக்கள் அதிகளவில் வருவர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திரும்பும் மக்கள்: பொங்கல் முடிந்து மக்கள் பலரும் சென்னைக்கு திரும்பி உள்ளனர். இதனால் பலர் இன்று பீச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு பின்பான சிறப்பு பேருந்துகள் இன்றும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று சிறப்பு பேருந்துகள் இயங்கிய நிலையில் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொங்கலுக்கு களமிறக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மற்றும் மற்ற பேருந்துகள் எந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும், எங்கிருந்து பேருந்து பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இங்கே விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டு பணிக்கு திரும்பி உள்ளனர். இதையடுத்து பொங்கலுக்கு முன் 12-01-24 முதல் 14-01-24 2 சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட்டது. இதில் பல லட்சம் பயணிகள் சென்னை, கோவை, பெங்களூர் உட்பட நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

சிறப்பு பேருந்து: இந்த நிலையில்தான் தற்போது பொங்கலுக்கு பின்பான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது பொங்கலுக்கு பின் 16-01-24 முதல் 18-01-24 வரை (சிறப்பு பேருந்துகள் இயக்கம்) இயக்கப்படும்.

இன்றும்.. பொங்கல் பண்டிகைக்கு பிறகு 17,589 பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையை நோக்கி 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். பொங்கலுக்கு பிறகு வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரைதான் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 5 முன்பதிவு மையங்கள் செயல்படும். மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பொங்கலுக்கு பிறகான பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் பொதுவாக நீண்ட விடுமுறை வரும் போதெல்லாம் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் விடப்படுவது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+